குணசேகரனின் மணிவிழா மூடு விழாவாக மாறப்போகுது.. ஜான்சி ராணி மூலம் ஜனனி கொடுக்கும் டுவிஸ்ட்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் வீட்டிற்குள் ஜான்சி ராணி வந்ததும் ஏதோ ஒரு பிரச்சினையை ஏற்படுத்தப் போகிறார். அதன் மூலம் குணசேகரன் பாதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மருமகள்களின் வேலைகளை கண்காணிப்பதற்காக தான் ஜான்சி ராணியை குணசேகரன் கூட்டிட்டு வந்திருக்கிறார் என்பது தெளிவாக புரிந்து விட்டது.

வந்த வேலையை சரியாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஜான்சி ராணி யார் என்ன பேசுகிறார் என்ன செய்கிறார் என்பதை வேவு பார்த்து குணசேகரன் இடம் போட்டு கொடுக்கிறார். குணசேகரன் ஏற்கனவே ஒவ்வொருவராக கவுத்துக்கொண்டு நினைச்சதை சாதித்து வருகிறார். தற்போது ஜான்சி ராணி சொல்லும் தகவலின் படி தம்பிகளை கைக்குள் போட்டு வீட்டிற்கு வந்த பெண்களை மறைமுகமாக தாக்குகிறார்.

இதில் முதல் பலியாடு ஈஸ்வரி தான், விவாகரத்து நோட்டீஸ் கேட்டு கோர்ட்டுக்கு போன ஈஸ்வரி தற்போது குணசேகருடன் சேர்ந்து மணிவிழா பண்ணுவதற்கு தயாராகி விட்டார். மற்ற பெண்களும் எதுவும் சொல்ல முடியாமல் புருஷன்கள் சொல்றதுக்கு எல்லாம் ஆடுகிறார்கள். அந்த வகையில் ஜனனியின் அப்பாவை பங்க்ஷனுக்கு அழைப்பதற்கு சக்தி முடிவு எடுத்த நிலையில் என்னுடைய அனுமதி இல்லாமல் எங்க அப்பாவை கூப்பிடக்கூடாது என்று சொன்னார்.

ஆனால் சக்தி உன்னுடைய பேச்சு கேட்டு தான் நான் நடக்கனும்னா அதற்கு ஆள் நான் இல்லை என்று சொல்லி ஜனனி உடன் சண்டை போட்டு விட்டார். வரவர சக்தி பேச்சும் நடவடிக்கையும் மற்ற அண்ணன்களை விட மோசமாகத்தான் இருக்கிறது. பாவம் சக்தியுடன் மாட்டிக் கொண்டு ஜனனி அந்த வீட்டில் முழித்துக் கொண்டு வருகிறார்.

ஜனனி மீதும் தவறு இருக்கிறது, பொது சேவையை கொஞ்சம் நிறுத்திவிட்டு தன் கணவர் சக்தி என்ன நினைக்கிறார் என்பதை கொஞ்சம் யோசித்து சக்திக்காக நேரத்தை செலவழிக்க வேண்டும். அதை செய்யாமல் எந்நேரமும் அக்காக்களுக்கும் பொது சேவைக்கும் நேரத்தை செலவழித்தால் சக்தியும் விரக்தி அடைந்து விட்டார்.

சக்தியின் மனநிலை நன்றாக புரிந்து கொண்ட குணசேகரன் எரிகிற நெருப்பில் குளிர் காய்கிறார். இதை எல்லாம் பார்த்த ஜனனி, குணசேகரன் என்னதான் பிளான் பண்ணாலும் மணிவிழா நிச்சயம் அவருக்கு ஒரு மூடு விழாவாக தான் இருக்க போகிறது என்று சொல்கிறார்.

அந்த வகையில் ஜான்சி ராணி வழியிலேயே போயி ஜனனி, குணசேகருக்கு ஆப்பு வைத்து மணிவிழா நடத்தும் பொழுது அங்கே குணசேகரன் அவமானப்படும் அளவிற்கு ஒரு சம்பவம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுதான் குணசேகரனுக்கும் அடிமைகளாக வாழும் தம்பிகளுக்கும் விழப்போகும் மிகப்பெரிய அடியாக இருக்கப் போகிறது.