பொதுவாக சிலர் சோசியல் மீடியாவை கையில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு தோன்ற பதிவுகளை போட்டு வருகிறார்கள். ஆனால் அதில் நமக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதை கவனமாக இருந்து ஒவ்வொன்றையும் செய்வார்கள். இதற்கு எதிர்மறையாக தான் வனிதா விஜயகுமார். இவர் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ஆனால் அவரது வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது சொல்லி ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே தான் வருவார்.
அதிலும் இவரைப் பற்றி என்னதான் மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தூசி மாதிரி தட்டி விட்டு போகக் கூடியவர். அப்படிப்பட்டவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு சும்மா இருக்க முடியுமா அங்கேயும் பிரச்சனை செய்து பெரிய சர்ச்சைக்கு ஆளானார். இப்படி இவரை பற்றி சொன்னாலே நிறைய நெகட்டிவ் விஷயங்கள் அதிகரித்துக் கொண்டே தான் போகும்.
அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் ஒன்றும் சாதாரணமாக நடக்கவில்லை. வனிதாவின் மகளுக்கு முன்னாடியே திருமணத்தை செய்து கொண்டு அதன் மூலம் பீட்டர் பாலுக்கு லிப் லாக் கொடுத்து அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டார். இதனை எதிர்த்து நிறைய சோசியல் மீடியாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இவருடைய இந்த செயலுக்கு எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டார்கள்.
ஆனாலும் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் இவரும் பீட்டர் பாலம் செய்த எல்லா விஷயத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டே வந்தார்கள். அதுவே இவருக்கு ஒரு பிரச்சனையாக வந்தது. அதாவது பீட்டர் பாலின் முதல் மனைவி என்னுடன் விவாகரத்து ஆகாமலே எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெரிய பிரச்சினையை செய்து வந்தார். ஆனால் அவரையும் எப்படியோ ஏதோ ஒரு விதத்தில் சரி கட்டி விட்டார்.
அதற்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் எனக்கும் இவருக்கும் எந்த விதத்திலும் செட் ஆகாது என்று சேர்ந்த கொஞ்ச நாளிலேயே தனியாக பிரிந்து வந்து விட்டார். இப்படி இவர் பற்றி எல்லா விஷயங்களையும் அப்பட்டமாக இவரே சோசியல் மீடியாவில் வெளியிட்டார். ஆனால் தற்போது பீட்டர் பால் உடல்நிலை குறைவால் இறந்து போன பிறகு வனிதா, அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கூறி வருகிறார்.
அதாவது நாங்கள் முறைப்படி எந்த திருமணமும் செய்து கொள்ளவில்லை. சும்மா உறவு முறைக்காக மட்டும் தான் நாங்கள் சேர்ந்து கொண்டோம். மற்றபடி எனக்கும் அவர்க்கும் எந்த உறவும் இல்லை. அத்துடன் அவர் என் கணவரை கிடையாது என்று திடீரென பெரிய குண்டை தூக்கி போட்டு வருகிறார். பீட்டர் பால் இறந்த பின்னும் அவருக்கு அவமானத்தை கொடுக்கிறார். இப்படி வனிதா சொன்ன பதிலை கேட்டு பலரும் அதிர்ச்சியாகி இப்படியும் இருப்பார்களா என்று வனிதாவை கிழித்து தொங்க விட்டு வருகிறார்கள்.