Serial: சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகன், விலகப் போவதாக அவருடைய சோசியல் மீடியா ஸ்டோரில் பதிவு போட்டிருக்கிறார். அதாவது சமீபத்தில் தான் புதுசாக வந்து அனைவரையும் கவர்ந்து பார்ப்பவர்களை ரசிக்கும்படியாக நடிப்பை கொடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயபாலா என்பவர் சீரியலில் இருந்து விலகப் போகிறார்.
இவர் தமிழுக்கு அறிமுகமான முதல் சீரியல் இதுதான். முதல் சீரியலிலே ரசிகர்களை வென்று நூறாவது எபிசோடு வரை நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதாகவும் எனக்கு பதிலாக இன்னொரு ஹீரோ வருவார் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அந்த சீரியலின் கதாநாயகன் யார் என்றால் ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் மனசெல்லாம் என்ற சீரியலில் அருள் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜெயபாலா. இந்த சீரியலின் கதை விறுவிறுப்பாகவும் பார்க்க ஆர்வமாகவும் இருந்ததற்கு முக்கிய காரணம் அருள் மற்றும் கரிகாலன். இவர்களுடைய நடிப்பு எதார்த்தமாக இருந்தது.
இந்த இரண்டு ஹீரோக்களுக்கும் சீரியல் படி இப்பொழுது தான் பல திருப்புமுனையுடன் கல்யாணம் நடைபெற்றது. அந்த வகையில் பிடிக்காத வகையில் ஜோடி மாத்தி கல்யாணம் நடந்ததால் தம்பதிகளாக இருக்கும் அருள் மற்றும் வானதிக்கு இடையே டாம் அண்ட் ஜெர்ரி சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது.
இது சூடு பிடிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது இந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக ஜெயபாலா என்கிற அருள் பதிவு போட்டிருக்கிறார். மேலும் கரிகாலன் கேரக்டர் அப்படியே இருப்பதால் நிச்சயம் தொடர்ந்து இந்த சீரியலுக்கு மக்கள் பேராதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.