அப்பத்தாவின் சொத்தை எத்தனை பேர் தான் ஆட்டைய போடுவீங்க.? ஜீவானந்தத்தின் மாஸ்டர் ஸ்கெட்ச்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பாய்ந்து வருகிறது. இவ்வளவு நாள் அந்த ஜீவானந்தம் யார் என்று மூளையே போட்டு கசக்கி கொண்டிருந்த நேரத்தில் தற்போது இவர் வந்த பிறகு நல்லவரா கெட்டவரா என்று யோசிக்கும் அளவிற்கு புரியாத புதிராக இருக்கிறது. இவருடைய பேச்சைப் பார்த்தால் நல்லவராகவும் இவரின் செயல்களை பார்த்தால் தில்லுமுல்லு செய்யக்கூடிய ஆளாகவும் இருக்கிறார்.

மொத்தத்துல குணசேகரனுக்கு சரியான ஆப்பு இவர் மூலமாக இருக்கப்போகிறது. தற்போது கதைப்படி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அதாவது ஆதிரை திருமணத்திற்கு அனைவரும் மண்டபத்திற்கு போன நிலையில் யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவின் கைரேகையை எடுக்க போகும் குணசேகரனின் ஆடிட்டர். ஆனால் அதை ஒரு வழியாக அந்த வீட்டின் பெண்கள் தடுத்து விட்டனர்.

அடுத்ததாக மண்டபத்தில் ஜான்சி ராணி, கரிகாலன் திருமணம் நல்லபடியாக நடக்குமா என்ற குழப்பத்தில் கூச்சல் இடுகிறார். எல்லாத்தையும் சகித்துக் கொண்டு கல்யாணத்தை நான் நினைத்தபடி நடத்தி முடித்து விட வேண்டும் என்று குணசேகரன் அமைதியாக இருந்து காய் நகர்த்துகிறார். ஆனால் ஜனனி மற்றும் அந்த வீட்டின் பெண்கள் குணசேகரன் நினைத்தபடி கல்யாணத்தை நடத்தி விடக்கூடாது என்று ஆதிரைக்கு திருட்டுத்தனமாக கல்யாணத்தை செய்யப் போகிறார்.

இங்கு தான் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. அதாவது ஜனனி பிளான் பண்ண படி ஆதிரை அருண் திருமணம் நடக்க வேண்டும் என்றால் இங்கே அருண் வரவேண்டும். ஆனால் இந்த அருண் தற்போது ஜீவானந்தம் கஸ்டடியில் இருக்கிறார். அடுத்ததாக அப்பத்தாவின் கைரேகையை எடுக்க வேண்டும் என்று ஜீவானந்தம் முயற்சி செய்கிறார். இதை வீடியோ கேமரா மூலம் கண்டிப்பாக ஜனனி பார்த்து கண்டுபிடித்து விடுவார்.

அதனால் ஜீவானந்தம் நினைத்தது நடக்காது. அடுத்ததாக இவரிடம் இருக்கும் அருணை பகடைக்காயாக வைத்து ஜனனிடம் பேரம் பேசப் போகிறார். எப்படி என்றால் ஆதிரை திருமணம் செய்து கொள்ள அருண் வேண்டுமென்றால் எங்களுக்கு அப்பத்தாவின் கைரேகை வேண்டும் என்று ஜனனிக்கு செக் வைக்கப் போகிறார்.

இதனால் ஜனனிக்கும் வேறு வழி இல்லை இப்பொழுது ஆதிரை திருமணம் நடக்காவிட்டால் குணசேகரன் கரிகாலன் கூட திருமணத்தை முடித்து விடுவார். அதனால் தற்போது ஜனனி சரியான முறையில் ஸ்கெட்ச் போட்டு ஆதிரையின் திருமணத்தையும் நடத்தணும் அதே நேரத்தில் அப்பத்தாவின் சொத்தையும் பாதுகாக்க வேண்டும். பார்க்கலாம் பரபரப்பான திருப்பங்களுடன் எந்த மாதிரியான கதை அமைகிறது என்று.