6 மாதங்களாக காத்திருந்தேன்.. கணவர் இறந்த பிறகு மீனா எடுத்த அதிரடி முடிவு

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பிறகு டாப் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து தற்போது முக்கியமான கதாபாத்திரங்களில் மீனா நடித்து வருகிறார். கடைசியாக இவர் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் அவருக்கு முறைபொண்ணாக நடித்திருந்தார்.

இந்நிலையில் மீனா 2009 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த மென்பொருள் என்ஜினியரான வித்யாசகரை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீனாவின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு புறா எச்சத்தால் ஏற்படும் கிருமி அவரது சுவாசக் குழாயை மேலும் பாதித்துள்ளது. இதனால் வித்யாசாகரின் இரண்டு நுரையீரலும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய, 6 மாதத்திற்கு மேலாக மாற்று உறுப்புக்காக காத்திருந்தனராம்.

அதன்பிறகு இருதயத்திலும் பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்குகளை எல்லாம் மீனா தான் செய்து, அனைவரையும் கலங்க வைத்தார். கணவரின் இழப்பிற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மீனாவை அவருடைய தோழிகளான ரம்பா, சங்கீதா, சங்கவி உள்ளிட்டோர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டு வருகின்றனர்.

இன்னிலையில் மீனா 6 மாதங்களாக மாற்று உறுப்புகாக தன்னுடைய கணவனுக்காக காத்திருந்த நிலையில், அப்போது அவருக்கு மட்டும் மாற்று உறுப்பு கிடைத்திருந்தால் தன்னுடைய வாழ்க்கையை வேற மாதிரி ஆகி இருக்கும்.

ஆகையால் ஒருவர் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்பதன் முக்கியத்துவத்தை தன்னுடைய வாழ்க்கையில் உணர்ந்து கொண்டார். ஆகையால் மீனா தனது உடல் உறுப்பையும் தானம் செய்திருக்கிறார். இதைத் தன்னுடைய ரசிகர்களும் செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்கிறார்.