Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை ஒரு நாள் கூட மிஸ் பண்ண முடியாமல் அனைவரும் பார்த்து வருகின்றனர். அடுத்து என்ன வர இருக்கிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதைக்களம் அமைந்திருக்கிறது. ஒருத்தருக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிருச்சுனா அவர்களை சும்மா விடாது என்று சொல்வார்கள், அது தற்போது குணசேகரன் விஷயத்தில் சரியாக இருக்கிறது.
இவ்வளவு நாளா கெத்தாக எல்லாரையும் ஆட்டி படைத்த குணசேகரன் தற்போது செல்லா காசாக குடும்பத்தின் அனைவரது முன்னாடியும் இருக்கிறார். இதற்கு ஆகத்தான் அப்பத்தாவும், ஜனனியும் இவ்ளோ நாளாக போராடி வந்தார்கள். ஜனனி சில சமயங்களில் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறார் என்று யோசித்த நிலையில் தற்போது தான் புரிகிறது.
அதாவது வேகத்தை விட விவேகமாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும் என்பதுதான் ஜனனியோட திட்டம். இந்த விஷயத்தில் ஜெயித்து விட்டார். அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டைய போட வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வந்தார் குணசேகரன். தற்போது உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்பது போல் 40% சொத்தும் இல்லை, இவருடைய சொத்துக்கும் ஆப்பு வைத்து விட்டார்கள் மருமகள்கள்.
அதாவது ஆடிட்டர் சொன்னபடி இவருடைய கம்பெனி அனைத்தையும் மருமகள் பெயரிலிருந்து மாற்றி விட வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒரு பத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறார். அதற்கு ரொம்பவே தெனாவட்டாக நக்கல் ராணி நான் இப்பொழுது இந்த பத்திரத்தில் கையெழுத்து போட மாட்டேன் சொன்னால் என்ன பண்ணுவீங்க என்று கேட்கிறார். அதற்கு ரேணுகா அவரால் ஒன்னும் செய்ய முடியாது என்று அசால்டாக சொல்கிறார்.
அப்பொழுது குணசேகரன் மூஞ்சியை பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அத்துடன் சக்தியும் கையெழுத்து போட வேண்டாம் என்று ஜனனி தடுக்கிறார். இத்தனை நாள் உங்களுக்கு அமைதியாக இருந்தது உங்கள் மேலே இருந்த பயத்தினால் இல்லை என்று சொல்கிறார். உடனே குணசேகரன் பேச ஆரம்பிப்பதற்குள் நக்கல் ராணி குணசேகரன் பாஷையில் வெளுத்து வாங்கி விடுகிறார்.
இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க ஜீவானந்தம், கௌதமிடம் அப்பத்தாவின் 40% சொத்தின் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து பார்க்க சொல்கிறார். அதே நேரத்தில் ஜனனி மற்றும் சக்தி, கௌதமை சந்தித்து ஜீவானந்தம் பற்றிய உண்மையை சொல்லி இவரை கண்டுபிடிப்பதற்கு எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்கிறார். கௌதம் இரண்டு பேருக்கு நடுவில் இருந்து யாருக்கு சாதகமான விஷயங்களை செய்யப் போகிறார் என்பது தான் மீதமுள்ள கதையாக வர இருக்கிறது.