அய்யனார் துணை சீரியலில் சேரனை நம்பி உதவி கேட்கும் நிலா.. சோழன் சொன்ன பொய்யால் அவஸ்தைப்படும் அண்ணன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் என்னதான் நிலா கழுத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாலி கட்டி இருந்தாலும் சோழனுக்கு நிலாவை உண்மையிலேயே பிடித்திருந்தது. அந்த சமயத்தில் தன்னுடைய குடும்பத்தை பற்றி பெருமையாகவும் அண்ணன் பெரிய வேலை பார்ப்பதாகவும் சொல்லி நிறைய விஷயங்களை நிலாவை நம்ப வைத்து விட்டார்.

அதனால் தற்போது சோழனை கட்டிட்டு வந்திருக்கும் நிலா, ஒவ்வொரு விஷயத்திலும் ஏமாந்து போய் நிற்கிறார். கடைசியில் சேரன் ஒரு இன்ஜினியர் என்று நம்பி நிலா, சேரனிடம் உதவி கேட்கிறார். நீங்க வேலை பார்க்கும் ஆபீஸில் எனக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கி கொடுக்க முடியுமா என்று கேட்கிறார்.

அதனால் சோழன் சொன்னது பொய் என்று சொல்ல முடியாமல் சேரன் அவஸ்தை பட்டு கொண்டிருக்கிறார். அதனால் நிலா கேட்டுக் கொண்ட உதவியின் படி நான் எனக்கு தெரிந்தவர்களிடம் உனக்கு எப்படியாவது வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லிவிடுகிறார். இருந்தபோதிலும் நிலா அந்த வீட்டில் இருக்கும் குறைகளை பார்த்துக் கொண்டே இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்.

அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக இருண்டு போய் இருக்கும் அந்த வீட்டிற்கு பிரகாசம் கொடுக்கும் விதமாக சில வேலைகளை பார்க்கிறார். இருந்தாலும் நடேசன் பண்ணும் அட்ராசிட்டியை தாங்கிக் கொள்ள முடியாத நிலா கொஞ்சம் முகம் சுழிக்கும் அளவிற்கு இருக்கிறது.

கடைசியில் அந்த குடும்பம் மற்றும் நடேசன் ஏன் இந்த நிலைமையில் இருக்கிறார் என்ற உண்மையை கேட்டுக் கொள்ளப் போகும் நிலா, அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு பக்க பலமாக இருந்து எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப் போகிறார்.

Leave a Comment