Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி ராமச்சந்திரன் குடும்பத்திற்குள் நுழைந்ததிலிருந்து சின்ன சின்ன பிரச்சனைகளை உண்டாக்கி மற்றவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்தார். ஆனால் விஜி என்ன பண்ணாலும் அதை தோற்கடிக்கும் விதமாக மாறன் வீரா தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனால் விஜியின் அம்மா, வீட்டிற்குள் இருக்கிறார் என்று வீரா மாறனுக்கு தெரிந்து விட்டது. அதனால் ஆதாரத்தோடு ராமச்சந்திரன் மற்றும் வள்ளிக்கு தெரிய வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி கொசு மருந்து வீட்டிற்குள் அடித்ததாக சொல்லி வீட்டில் இருப்பவர்களை வெளியே வரவைத்து விட்டார்கள்.
பிறகு விஜி அம்மா குடோனில் மறைந்து கொண்டு சிரிப்பு சத்தத்துடன் சத்தமாக சிரித்து கொண்டிருக்கிறார். இந்த சத்தத்தை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வீட்டிற்குள் சென்று போய் பார்க்கிறார்கள். அப்பொழுது தான் தெரிகிறது விஜியின் அம்மா இறக்கவில்லை, விஜி பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்று.
உடனே வள்ளி மற்றும் ராமச்சந்திரன் இருவரும் சேர்ந்து விஜியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பியதும் விஜி மயக்கம் போட்டு விழுவது போல் டிராமா போடுகிறார். உடனே ராமச்சந்திரன், டாக்டரை வரச்சொல்லி விஜிக்கு என்ன ஆச்சு என்று பார்க்கச் சொல்கிறார். அப்பொழுது அந்த டாக்டர், விஜி கர்ப்பம் போய் சொல்கிறார்.
இதுவும் விஜயின் நாடகம் தான், ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் பிருந்தா, கார்த்திக் மீது சந்தேகப்படுகிறார். அத்துடன் கார்த்திக் மீது இந்த மொத்த பழியும் விழுந்து விடுகிறது. இதனால் விஜி வீட்டை விட்டு போகாமல் மறுபடியும் ராமச்சந்திரன் வீட்டுக்குள்ளே இருக்கும்படி சூழ்நிலை அமைந்து விடுகிறது.
ஆனால் இது பொய், இதுவும் விஜியின் நாடகம்தான் என்று மாறன் வீராவிற்கு தெரியும். அதனால் கூடிய சித்தத்தில் உண்மையை கண்டுபிடித்து பிருந்தா வாழ்க்கையை காப்பாற்றி விடுவார்கள்.