Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சுதாகருக்கும் கோபிக்கும் இடையில் சண்டை ஆனதால் சுதாகர் கோபியை கீழே தள்ளிவிட்டு நித்தேஷ் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க வில்லை என்றால் உன் குடும்பத்தை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டி விட்டுப் போய் விடுகிறார். இதனால் விரக்தியில் வீட்டுக்கு வரும் கோபி நடந்த விஷயத்தை இனிய, ஈஸ்வரி மற்றும் பாக்யாவிடம் சொல்கிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இனியா கோபத்துடன் நிதேசத்துக்கு போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது சுதாகர் பேசிய பொழுது இனியா, கோபியை தள்ளிவிட்டதற்கு நியாயம் கேட்கிறார். அதற்கு சுதாகர் தேவையில்லாத விஷயங்களை பேசி இனியாவின் கோபத்தை இன்னும் அதிகரித்து விட்டார்.
உடனே இனியா போலீஸ் ஸ்டேஷனில் போய் கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு போய்விட்டார். ஆனால் இனியா போகும் பொழுது சுதாகர் ஃபோன் பண்ணி சமாதனமாக பேசிவிடலாம். நீ கேட்டபடி நான் உனக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறேன். கல்யாணத்துக்கு செலவு பண்ண பணத்திற்கு வட்டி முதலுமாக கொடுத்து விடுகிறேன்.
அத்துடன் உங்க அம்மாவின் ரெஸ்டாரண்டையும் நான் கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி இனியாவின் மனசை மாற்றி விடுகிறார். அத்துடன் சுதாகர் இருக்கும் இடத்தை சொல்லி அங்கே தனியாக இனியவை வர சொல்லுகிறார். உடனே இனியாவும் யாரிடமும் சொல்லாமல் அந்த இடத்திற்கு போகிறார். ஆனால் அங்கே சுதாகர் இல்லை, அதற்கு பதிலாக நித்தீஷ் தான் இருக்கிறார்.
நித்தீஷ் போ**தை பழக்கத்தில் இருந்ததால் என்ன பேசுகிறோம் எது செய்கிறோம் என்று தெரியாமல் இனியாவிடம் வம்பு பண்ணினார். உடனே இனிய நித்யசை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து கிளம்பும் பொழுது நித்தேஷ் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். இதனால் பயந்து போன இனிய, நித்தேஷ் பக்கத்தில் போய் மூச்சு இருக்கிறதா என்று பார்க்கிறார். ஆனால் நித்தேஷுக்கு ஒன்னும் ஆகியிருக்காது. இதெல்லாம் சுதாகர் போட்டோ பிளான் தான்.
அது தெரியாமல் இனியா போய் சிக்கிக் கொண்டார், ஆனால் எல்லா பிரச்சனையும் முடிவுகட்டும் விதமாக பாக்கியா சீரியல் இறுதி அத்தியாயத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டது.