செல்லப் பிள்ளையை தாரவாத்து கொடுத்த கோபி பாக்கியா.. சம்மந்தி வீட்டில் நடக்க போகும் அரங்கேற்றம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி சில விஷயங்களில் அஜாக்கிரதையாக இருந்தாலும் இனியா விஷயத்தில் சரியாகத்தான் முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கையில் பாக்கியா, கோபி சொன்னப்படி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதன்படி இனியா மற்றும் நித்தீஷ்க்கு கல்யாணம் நடந்து முடிந்து விட்டது.

ஆனாலும் பாக்யாவிற்கு கொஞ்சம் வருத்தம் இருக்கிறது. அதாவது இந்த கல்யாணத்தை பகடைக்காயாக வைத்து ஈஸ்வரி ரெஸ்டாரண்டை எஸ்எஸ் ஹோட்டலாக மாற்றுவதற்கு சம்மதத்தை வாங்கியது பாக்யாவுக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் இனியாவின் சந்தோஷத்திற்காக பாக்கியா எல்லாத்துக்கும் சம்மதம் தெரிவித்து விட்டார்.

அடுத்து இனியாவின் கல்யாணம் முடிந்த கையோடு பாக்கியா ஆனந்த கண்ணீர் வடித்து இனியாக்கு சில அட்வைஸ் கொடுக்கிறார். ஒரு பக்கம் கணவர் புகுந்த வீடு என்று இருந்தாலும் இன்னொரு பக்கம் நீ படிக்க வேண்டியதை படித்து லட்சியத்தில் சாதித்து காட்ட வேண்டும். கல்யாணம் முடிந்த கையோடு புகுந்த வீடே கதி என்று இறந்து விடாதே என்று இனியாவிற்கு அறிவுரை வழங்குகிறார்.

அதே மாதிரி கோபியும் வந்து இனியா பாப்பா என்று பீல் பண்ணி பேச ஆரம்பிக்கிறார். அத்துடன் இனிய செல்லமாக இருந்தாலும் தற்போது புகுந்த வீட்டில் எப்படி இருக்க போகிறாரோ என்ற பயம் கோபிக்கும் பாக்கியாவுக்கும் இருக்கிறது. கடைசியில் ஈஸ்வரி நினைத்தபடி கோபி மற்றும் பாக்ய இருவரும் சேர்ந்து இனியவை தாரவாத்து கொடுத்து விட்டார்கள்.

அத்துடன் இந்த சுதாகர் சும்மா இல்லை பாக்கியா கையெழுத்து போட்ட பத்திரத்தை ஹோட்டலுக்கு எடுத்துட்டு போய் இனி அந்த ரெஸ்டாரண்ட் முழுக்க முழுக்க சுதாகர் கண்ட்ரோலுக்கு வந்து விட்டதாகவும். இனியாவின் கல்யாணத்திற்கு பரிசாக கொடுத்ததாகவும் எழுதி இருப்பதை காட்டி பாக்கியத்தலையில் இடியே இறக்கி விட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியம் எதுவும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்று கோபி மற்றும் ஈஸ்வரிடம் புலம்புகிறார்.

இன்னும் இந்த சுதாகர் இனியாவை வைத்து என்ன எல்லாம் ஆட்டத்தை ஆடப் போகிறாரோ, எப்படி இந்த பிரச்சினையை இனியா மற்றும் பாக்கியம் சரி செய்யப் போகிறார்கள் என்பது இனி அடுத்து வரப்போகும் கதையாக இருக்கப் போகிறது.