ஈஸ்வரி death ட்ராக், காரணம் இதுதான்.. எதிர்நீச்சலை காப்பாற்ற ஜீவானந்தம் எடுத்த முடிவு

Ethirneechal 2 serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஈஸ்வரியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ஈஸ்வரிக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் ஜனனி ரேணுகா நந்தினி குழப்பத்தில் இருந்தார்கள். ஆனால் டாக்டர் வந்து ஈஸ்வரியை வேண்டுமென்று அடித்து துன்புறுத்து இருக்கிறார்கள் என்று சொன்னதன் படி அனைவருக்கும் இந்த வேலையை செய்தது குணசேகரன் தான் என்று தெரிந்து விட்டது.

அதனால் கோபத்துடன் கொந்தளித்த குற்றவை, குணசேகரன் வீட்டிற்கு சென்று ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார். ஆனால் அதற்கு முன் அறிவுக்கரசி கையில் அந்த ஆதாரம் சிக்கிக் கொண்டது. இதனால் குணசேகரை எதுவும் பண்ண முடியாத சூழ்நிலையில் குற்றவை அமைதியாக போய்விட்டார். இருந்தாலும் ஜனனி, குணசேகருக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் விதமாக வீட்டு வாசலில் நின்று சவால் விடுகிறார்.

ஆனால் குணசேகரன் அப்படியே ஜனனி மீது பழி போடும் விதமாக ஈஸ்வரின் நிலைமைக்கு காரணம் நீதான் என்று சொல்லிவிடுகிறார். அதனால் ஜனனி இதை நீங்கள் ஆதாரத்துடன் நிரூபித்து விட்டால் ஈஸ்வரி அக்கா விஷயத்திலும் அவர்களுடைய குழந்தை விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன். அதே மாதிரி இந்த அக்கிரமத்தை செய்தது நீங்க தான் என்று நிரூபித்து விட்டால் என்ன பண்ணுவீங்க என்று கேள்வி கேட்கிறார்.

இப்படி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஈஸ்வரியின் death வர காரணம் ஈஸ்வரிக்கு இந்த சீரியலை தாண்டி பட வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. அதனால் அதில் கவனம் செலுத்த வேண்டும், அதே மாதிரி முன்னாடி மாதிரி எதிர்நீச்சல் சீரியலின் கதையும் கேரக்டரும் அமையாததால் ஈஸ்வரி இதிலிருந்து விலகுவதற்கு தயாராகி விட்டார்.

அப்படி ஈஸ்வரி விலகினால் ஈஸ்வரிக்கு பதிலாக வேறு ஒருவரை கொண்டு வந்தால் அதை பார்ப்பவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் எதிர்நீச்சல் முதல் சீசனில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவிற்கு பதிலாக வேறு ஒருவரை கொண்டு வந்ததால் தான் நாடகம் தடம் புரண்டு போனது.

அதே நிலைமை எதிர்நீச்சல் 2 சீரியலுக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஈஸ்வரி கதையை அப்படியே முடித்த மாதிரி காட்டலாம் என்று death சீனை கொண்டு வந்திருக்கிறார்கள். அதனால் ஈஸ்வரி இறப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு அதற்கான தண்டனையை குணசேகருக்கு வாங்கி கொடுக்கும் விதமாக இனி கதைகள் அமையப் போகிறது.