Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எப்படியாவது கஷ்டப்பட்டு தனக்கான தேவைகளை தானே பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொந்தக்காலில் ஜெய்ப்பதற்கு பாக்கியா போராடி வருகிறார். இதில் ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி பாக்கிய போராடுகிறார். அந்த சமயத்தில் பாக்கியா ஹோட்டலை அடைக்கும் நேரத்தில் வந்து சில பேர் பிரச்சனை பண்ணி சாப்பாடு கேட்டு தொந்தரவு படுத்தி விட்டார்கள்.
எல்லாத்தையும் சமாளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பாக்கியா நேரம் ஆகிவிட்டது, அத்துடன் ஹோட்டலில் நடந்த பிரச்சனையும் யோசித்து இதற்கு என்ன தீர்வு என்று குழப்பத்திலேயே வருகிறார். ஆனால் இந்த பிரச்சனையை வீட்டில் சொல்ல முடியாது, ஏனென்றால் யாருக்கும் பாக்கியம் பண்ணும் பிசினஸ் பிடிக்கவில்லை. எல்லோரையும் எதிர்த்து தான் மெஸ்ஸை நடத்தி வருகிறார்.
அதனால் எந்த பிரச்சினை வந்தாலும் தானே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணி வீட்டிற்கு போகிறார். ஆனால் ஈஸ்வரி கேட்டை அடைத்து விட்டு ஹாலில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார். இது தெரியாமல் பாக்கியா வாசலில் நின்று கேட்டு கதவை தட்டி அத்தை மற்றும் எழில் என்று கூப்பிடுகிறார். ஆனால் ஈஸ்வரி காதில் விழுந்தும் பாக்கியா வெளியவே நிற்கட்டும் என்று கதவை திறக்காமல் உட்கார்ந்து இருக்கிறார்.
அப்பொழுது அங்கே வந்து எழில் அம்மா இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லை, போனும் சுவிட்ச் ஆப் இருக்கு. நான் போய் பார்த்துட்டு வருகிறேன் என்று கிளம்பிய நிலையில் பாக்கிய வாசலில் நிற்பதை எழில் பார்த்து விடுகிறார். பிறகு கதவைத் திறந்து உள்ளே கூடிட்டு வரும்பொழுது நான் ரொம்ப நேரமாக தட்டிக் கொண்டிருக்கிறேன் யாருமே கதவை திறக்கவில்லை என்று பாக்யா செய்கிறார்.
உடனே எழில், பாட்டி இங்க தான் உட்கார்ந்து கொண்டிருந்தார் என்று சொல்லிய நிலையில் ஈஸ்வரி பாக்கியாவிடம் லேட்டா வந்ததுக்கு சண்டை போடுகிறார். பிறகு மறுநாள் கோபியை வரவழைத்து பாக்யா பிசினஸிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று பஞ்சாயத்து கூட்டினார். ஆனால் பாக்கியா காலையிலேயே எழுந்து ஹோட்டலுக்கு போய் விடுகிறார். இதனால் பாக்கிய திரும்ப வந்ததும் மறுபடியும் பிரச்சினை பண்ணுவதற்கு ஈஸ்வரி காத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக அமிர்தா எல்லோருக்கும் சமைத்து கொடுக்கிறார். அதில் குறை கண்டுபிடித்து ஈஸ்வரி அமிர்தாவை திட்டிவிட்டு பிரச்சனை பண்ணுகிறார். இது எல்லாம் தாண்டி ஹோட்டலில் வேலை பார்க்கும் பாக்யாவிடம் செல்வி நேத்து லேட்டா போனதுக்கு என்ன பிரச்சனை ஆச்சு என்று கேட்கிறார்.
அப்பொழுது பாக்யா நடந்த விஷயத்தை பற்றி சொல்லிய நிலையில் செல்வி கொடுத்த ஐடியா என்னவென்றால் இந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என்று மகன் வீட்டிற்கு தான போனாங்க. அப்பொழுது ஏன் திரும்ப வந்து இந்த அளவுக்கு பிரச்சினை பண்ண வேண்டும். நீ பேசாம மறுபடியும் கோபி சார் வீட்டுக்கு உன் மாமியாரை அனுப்பி வைத்து விடு என்று செல்வி ஐடியா கொடுக்கிறார்.