மகாநதி சீரியலில் காவேரி விஜய் ஒன்னு சேரும் நேரம்.. பொக்கிஷமாக குழந்தையை வளர்க்கப் போகும் VIKA

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மற்றும் காவிரி தற்போது பிரிந்து இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் இனி ஒன்று சேர போவதற்கு ஒரே ஒரு காரணமாக வரப்போகுது அவர்களுடைய குழந்தை தான். ஒரு பக்கம் காவேரி குடும்பத்தில் இருப்பவர்கள் விஜயுடன் சேரவிடாமல் தடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் வெண்ணிலாவை வைத்து விஜய்யிடம் இருந்து காவிரியை நிரந்தரமாக பிரித்து காவேரி குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று பசுபதி ராகினி சூழ்ச்சி பண்ணி வருகிறார்கள். இதை தெரிந்து கொண்ட விஜய் நேரடியாக பசுபதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடிதடியில் இறங்கி சண்டை போட்டு வந்தார்.

ஆனாலும் வெண்ணிலா மற்றும் வெண்ணிலவின் மாமா விஜயுடன் வீட்டில் இருப்பதால் இவர்களை எப்படி போக வைப்பது என்பது தெரியாமல் இருக்கும் பட்சத்தில் காவிரி தனியாக இருப்பதினால் தான் இவ்வளவு தூரம் பிரச்சனை. காவேரி தன்னுடன் வந்துவிட்டால் வெண்ணிலா நம்மளை விட்டுப் போய்விடுவார் என்று யோசித்த விஜய், காவிரியை சந்தித்து பேச போகிறார்.

அப்படி போன பொழுது காவிரி மயக்கம் போட்டு விழுந்த நிலையில் விஜய் காவிரியை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார். ட்ரீட்மென்ட் போன நிலையில் பதட்டத்துடன் வெளியே நின்ற விஜய், டாக்டரிடம் காவிரிக்கு என்னாச்சு என்று கேட்கிறார். டாக்டர் கர்ப்பமாக இருக்கும்போது சரியான நேரத்தில் சாப்பிடணும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா என்று விஜய்யிடம் சொல்கிறார்.

உடனே விஜய்க்கு அப்பொழுது தான் தெரிந்தது காவிரி கர்ப்பம் என்று, உடனே விஜய் உணர்வுபூர்வமான தருணத்துடன் காவிரியை பார்க்கிறார். காவிரியும் ஆம் என்று சொல்லிய நிலையில் விஜய் இது போதும் எனக்கு, இனி நீ நான் நம்முடைய குழந்தை என்று சந்தோசமான ஒரு வாழ்க்கையை வாழலாம் என சொல்லி காவிரியை சந்தோஷமாக பார்க்கிறார்.

அந்த வகையில் இனி இவர்கள் இருவரையும் பிரிக்க யாராலும் முடியாது, அத்துடன் சாரதாவும் இனி எந்த காரணத்தை கொண்டும் காவிரிக்கு முட்டுக்கட்டை போட முடியாது. இனி அடுத்து காவிரி மற்றும் விஜய் ஒன்று சேர்ந்து குழந்தையை பொக்கிஷமாக பாதுகாத்து சந்தோஷமாக வாழ போகிறார்கள்.