இதைத்தான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் என்று சொல்லும் அளவிற்கு தற்போது எதிர்நீச்சல் சீரியலில் விறுவிறுப்பான ட்விஸ்ட்டுடன் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. யாரும் எனக்கு சமமானவர்கள் இல்லை என்று கர்வமாக இருக்கும் குணசேகரன், எஸ்கேஆர் மற்றும் சாருபாலாவை பழி வாங்குவதற்காக ஒரு நாடகத்தை ஆரம்பித்து அதற்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி வந்துவிட்டார். அதே மாதிரி அப்பத்தாவின் 40% சொத்து தனக்கு வந்து விட்டதாக ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார்.
ஆனால் குணசேகரன் நினைத்தது எதுவும் நடக்காத படி ஜனனி மற்றும் அந்த வீட்டின் மருமகள்கள் தைரியமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் நேற்று ரேணுகா பேசுனது செம மாஸ் ஆக இருந்துச்சு. இவ்வளவு பேசியும் கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாத மாதிரி நான் செய்யறது தான் சரி இந்த வீட்டில் நான் சொல்றத கேட்டு இருக்கிறவங்க இருங்க இல்லையென்றால் எல்லாரும் வெளியில போங்க என்று ஆணவத்தில் குணசேகரன் பேசுகிறார்.
ஆனால் இது ஆதிரைக்கு தேவைதான் அப்படிங்கிற மாதிரி தான் தோணுகிறது. குணசேகரன் உடன் சேர்ந்து கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டா என்ன திமிரு. குணசேகரனுக்கு சொர்ணாக்கா மாதிரி நடந்து கொண்டார். அதனால என்னமோ இவருடைய வாழ்க்கை என்று வரும் போது இவர் செய்த தீமை இவருக்கே வந்து முடிகிறது. அடுத்ததாக குணசேகரனின் அம்மா எவ்வளவு பட்டாலும் மாறவே மாட்டாங்க.
ஆனாலும் எதற்கும் அசராத ஜனனி துணிச்சலுடன் குணசேகரனை எதிர்த்து நிற்கிறார். அப்பத்தாவின் மருத்துவமனை செலவிற்கு ஈஸ்வரியின் வீட்டு பத்திரத்தை வைத்து சரி செய்வதற்காக அந்த பத்திரத்தை எடுத்து விடுகிறார் ஈஸ்வரி. அதே நேரத்தில் குணசேகரனை கண்ணில் விரல் விட்டு ஆட்டும் அளவிற்கு ஜனனி அந்த 40% சொத்து கண்டிப்பாக உங்களுக்கு வந்து சேராது என்று உறுதியாக குணசேகரனிடம் சொல்லும் விதம் தான் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கிறது.
இதைக் கேட்டு பொறுக்க முடியாத குணசேகரன் என்னம்மா சொல்ற கொஞ்சம் நின்னு சொல்லிட்டு போ என்று அவருடைய தோரணையில் அதுவும் பயத்துடன் கேட்கிறார். அது ஒன்னும் இல்ல குணசேகரன் அந்த 40% சொத்துக்கு ஆப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிட்டு போறாங்க. இதுக்கு அப்புறம் தான் இருக்குது ஜனனியோட ஆட்டம்.
அடுத்ததாக எதிர்பார்ப்பை தூண்டு விதமாக அந்த ஜீவானந்தம் யார் என்று எல்லாருடைய யோசனையும் அதில் தான் இருக்கிறது. அப்பத்தா இதெல்லாம் நினைத்து தான் ஏற்கனவே இதற்கு ஒரு முடிவு செய்து வைத்திருக்கிறார் என்று நமக்கு முன்னதாகவே தெரியும். அதை கூடிய சீக்கிரம் என்னவென்று ஜனனி கண்டுபிடித்து குணசேகரனை பைத்தியக்காரத்தனமாக அலைய விட போகிறார்.
அடுத்தபடியாக குணசேகரன் எப்படி கதிர் குடித்துவிட்டு கையெழுத்து போட்டதனால் அது செல்லுபடி ஆகாது என்று சர்டிபிகேட் ரெடி பண்ணாரோ அதே மாதிரி ஜனனியும் அப்பத்தா சுயநினைவு இல்லாமல் கையெழுத்து போட்டார் என்று சர்டிபிகேட் தயார் பண்ணப் போகிறார். இனி வரும் எபிசோடுகள் வெறித்தனமாக இருக்கப் போகிறது.