உமையா போட்ட கணக்கை சுக்கு நூறாக உடைக்கப் போகும் ஜனனி.. எல்லார் கண்ணிலேயும் மண்ணைத் தூவிய குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தினார் என்ற உண்மை எப்பொழுது தெரியவரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் வழக்கம் போல் குணசேகரன் இதுலயும் தப்பித்து விடுகிறார். அதாவது யார் கடத்தினார் என்கிற டிராக் அப்படியே மாறி தற்போது வேறு திசைக்கு போய்விட்டது.

கரிகாலன் சாப்டரை க்ளோஸ் பண்ணும் விதமாக கதிர் அடாவடியாக ஒரு முடிவு எடுத்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளிவிட்டார். இதுவரை முட்டாள் பீசாக இருந்த கரிகாலன் பெருத்த அவமானத்திற்கு பின் குணசேகரன் குடும்பத்தையே வேரோடு அறுக்காமல் விடமாட்டேன் என்று கோபத்தில் சாபம் இட்டு போய்விட்டார்.

இதன் பிறகாவது தர்ஷினியின் கல்யாணம் மேட்டருக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைச்சாச்சு என்று நினைத்தோம். ஆனால் இது ஒரு தொடர்கதையாகவே இருக்கும் என்று குணசேகரன் வீட்டிற்கு வந்த உமையா நிரூபித்து விட்டார். அதாவது குணசேகரன் இப்பொழுது இருக்கும் மனநிலைமையில் என்ன சொன்னாலும் ஓகே என்று சொல்லிவிடுவார்.

பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிய குணசேகரன்

அதனால் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி இந்த வீட்டிற்குள் புகுந்து விட்டால், மொத்த கன்றோலும் தன் கைக்கு வந்து விடும் என்று கணக்குப் போட்டு இருக்கிறார். அதற்காக உமையா தன்னுடைய மகன் சித்தார்த்தை உங்கள் வீட்டு மருமகனாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் குணசேகரன் பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிக்கொண்டார். இதை அங்கு இருப்பவர்கள் என்ன நடக்குது என்று தெரியாமல் வழக்கம் போல் வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார்கள். பிறகு உமையா அவருடைய மகனை வர சொல்லி பேசி முடிக்கிறார்.

இதை கேட்டதும் ஈஸ்வரி ஒரு அம்மாவாக நான் இந்த விஷயத்தை நடத்த விட மாட்டேன் என்று வாக்குவாதம் பண்ணுகிறார். அதே மாதிரி குணசேகரன், தர்ஷினி என்னுடைய பொண்ணு அதை வைத்து நான் இந்த கல்யாணத்தை நல்லபடியாக நடத்துவேன் என்று சபதம் போடுகிறார்.

இதனை தொடர்ந்து ஜனனி, அஞ்சனாவை கூட்டிட்டு சித்தார்த் வீட்டுக்கு போகிறார். அதே நேரத்தில் சித்தார்த் நான் வேற பெண்ணை காதலிக்கிறேன் என்று வீட்டில் இருப்பவர்களிடம் சொல்கிறார். அப்பொழுது அவர்கள் யார் என்று கேட்கும் பொழுது ஜனனி அது என்னுடைய தங்கச்சி தான் என்று கூட்டிட்டு வீட்டுக்கு வருகிறார்.

இப்படியும் இந்த ஒரு விஷயம் சுமூகமாக முடியப்போவதில்லை. வழக்கம்போல் இந்த காதல் கல்யாணமும் பிரச்சனைல தான் முடிய போகிறது. ஆனால் உமையா போட்ட கணக்கு மட்டும் நிறைவேற வாய்ப்பு இல்லை. ஏனென்றால் சித்தார்த்தும் அஞ்சனாவும் மனசார காதலிப்பதால் இவர்களுடைய கல்யாணத்தை ஜனனி கண்டிப்பாக நடத்தி வைப்பார்.

இந்த ஒரு விஷயத்தால் தற்போது வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தர்ஷினியை யார் கடத்தினார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க வாய்ப்பில்லை. அதனாலேயே எல்லார் கண்ணிலும் மண்ணைத் தூவும் விதமாக குணசேகரன் ஈசியாக அனைவரையும் டைவர்ட் பண்ணி விட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →