Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் போட்ட பிளான் படி தம்பிகள் மட்டும் இல்லாமல் வீட்டில் அடிமையாக வாழ்ந்து வீட்டை விட்டு வெளியே துள்ளி குதித்துப் போன பெண்களும் சிக்கிவிட்டார்கள். அதாவது பெண்களின் வீக்னசை புரிந்துகொண்டு அதை குணசேகரன் சரியாக பயன்படுத்தி விட்டார்.
ஊர் ஜனங்கள் முன்னாடி அசிங்கப்படுவது போல் ஒரு ட்ராமா போட்டு தம்பிகளை நம்ப வைத்து தன் பக்கம் இறுக்கமாக கொண்டு வந்து விட்டார். இந்த பஞ்சாயத்துகளை எல்லாம் பார்த்த நான்கு பெண்கள் மனதிலும் சின்ன வருத்தம் ஏற்பட்டு விட்டது.
அத்துடன் விசாலாட்சி மருந்து குடித்து உயிருக்கு போராடும் நிலைமையில் இருப்பதை கேள்விப்பட்ட நான்கு பெண்களும் வீட்டுக்கு ஓடோடி வந்து விட்டார்கள். உடனே இதுதான் சான்ஸ் என்று அனைவரும் அதே வீட்டில் இருக்கும் படியான சூழ்நிலையும் அமைந்துவிட்டது.
மேலும் ஈஸ்வரியையும் வெளியே விட்டுவிடக் கூடாது என்பதற்காக தர்ஷன் வைத்து புதுசாக சென்டிமென்ட் ட்ராமாவை போட்டு ஈஸ்வரி மனசையும் மாற்றி விட்டார்கள். அந்த வகையில் ஜோசியர் சொன்ன பரிகாரத்தை குணசேகரன் மற்றும் ஈஸ்வரி சேர்ந்து பண்ணும் படி நிலைமை ஆகிவிட்டது.
இதையெல்லாம் அந்த வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தர்ஷினியால் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் நீங்கள் எப்பொழுதும் போல் இந்த வீட்டில் கூடி கும்மாளம் அடித்து பேசிக் கொண்டே இருங்க. இதற்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று சரியான முடிவை எடுத்து வீட்டை விட்டு வெளியே போய் விட்டார்.
அடுத்தபடியாக ஈஸ்வரி ரேணுகா மற்றும் நந்தினிக்கு பக்கபலமாக இருக்கும் ஜனனியையும் வீட்டில் அடைத்துப் போட வேண்டும் என்று பிளான் போட்ட குணசேகரன் விசாலாட்சி மூலம் காய் நகர்த்துகிறார். ஜனனியையும் எப்படியாவது அடுப்பாங்கரையில் வேலை பார்க்க வைத்து பெண்கள் இதற்கு மட்டும்தான் லாய்க்கு என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று விசாலாட்சி இடம் சொல்லி விட்டார்.
அதற்கேற்ற மாதிரி வேலைக்கு கிளம்பிய ஜனனிடம் ஒவ்வொரு வேலையாக சொல்லி ஜனனியை வேலைக்கு போக முடியாத அளவிற்கு விசாலாட்சி டார்ச்சர் கொடுக்கிறார். ஆனால் ஜனனிடம் இது எதுவும் செல்லுபடி ஆகாது என்பதற்கு ஏற்ப நிச்சியம் ஜனனி எடுத்து இருக்கும் முடிவில் தெளிவாக இருந்து குணசேகரன் மூஞ்சில் கரையை பூசுவார்.