குணசேகரனை பைத்தியம் போல் புலம்ப வைத்த ஜனனி.. அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார்

ரொம்ப நாளாவே போர் அடித்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கதையாக புது திருப்பங்களுடன் வர இருக்கிறது. அதாவது அப்பத்தா கோமா ஸ்டேஜ்க்கு போன பிறகு அவ்வப்போது கண் விழித்து பார்க்கும் போதெல்லாம் ஜனனிடம் ஜீவானந்தம் என்ற பெயரை மட்டும் சொல்லி கொண்டே இருக்கிறார். இதன் மூலம் தான் அப்பத்தா குணசேகரனுக்கு ஒரு ஆப்பை ரெடி பண்ணி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

குணசேகரன் அப்பத்தா தன்னிடம் இருந்தால் மட்டும் தான் அவர் எழுதிக் கொடுத்த 40% சொத்து நிரந்தரமாக இருக்கும் என்று தந்திரமாக அப்பத்தாவை வேற ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்துக் கொள்கிறேன் என்று மருத்துவமனையில் இருந்து கூட்டிப் போகிறார். ஜனனி மற்றும் ஈஸ்வரி எவ்வளவு தடுத்தும் அதை பொருட்படுத்தாமல் உங்களிடம் நயா பைசா கிடையாது என்று கூறி அவர் நினைத்ததை சாதித்து விட்டார்.

இதற்கு அடுத்து அப்பத்தா ஜனனிடம் சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்பதை தீவிரமாக கண்டுபிடிக்க போகிறார். இவர் வந்தால் மட்டும் தான் குணசேகரனை எதிர்த்து நிற்க முடியும். இவரிடம் அப்பத்தா அந்த 40% சொத்துக்கான விஷயத்தை உயிலாக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதனால் அப்பத்தா குணசேகரனுக்கு போட்ட கையெழுத்து செல்லுபடியாகாமல் போகும்.

ஏற்கனவே ஜனனி இதைப் பற்றி குணசேகரனிடம் கையெழுத்துப் போட்டால் அது உங்களுக்கு வந்துருமா. நீங்க எப்படி கதிர் விஷயத்தை வைத்து ஏமாத்தினிங்களோ அதே மாதிரி இந்த சொத்தும் உங்களுக்கு கிடைக்காது என்று சொன்னார். இதை கேட்டதுமே குணசேகரன் பைத்தியக்காரன் போல புலம்பிக்கொண்டே இருந்தார். அந்த பயத்தினாலேயே அவசர அவசரமாக அப்பத்தாவை அவர் வசம் வைத்துக் கொண்டார்.

இதற்கிடையில் எவ்வளவு பட்டம் திருந்தாத கதிர். அவன் அண்ணன் பண்ணும் எல்லா தில்லாலங்கடி வேலைக்கும் துணையாக நிற்கிறார். இவர் இருக்கும் தைரியத்தினால் கூட குணசேகரன் இந்த அளவுக்கு ஆட்டம் போடுகிறார். இவங்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் விதமாக ஜனனிக்கு சப்போர்ட்டாக வரக்கூடியவர்தான் ஜீவானந்தம்.

அந்த ஜீவானந்தம் வேறு யாருமில்லை இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம். அவர் தான் மாஸ் என்ட்ரி கொடுத்து விறுவிறுப்பாக இந்த நாடகத்தை சூடு பிடிக்க வைக்க போகிறார். இனிமேல் குணசேகரின் ஆட்டமும் செல்லாது. அந்த 40% சொத்தும் அவர் கைக்கு போகாது. கோலங்கள் நாடகத்தில் எப்படி தேவயானிக்கு சப்போர்ட்டாக தொல்காப்பியன் என்ற ஒரு கேரக்டர் இருந்ததோ அதே மாதிரி திருச்செல்வம் ஜீவானந்தமாக வரப்போகிறார்.