எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரன் போட்ட பிளானுக்கு அடிபணிந்த ஜனனி.. அப்பத்தா வைக்கப் போகும் ட்யூஸ்ட், மாறும் கதை

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் உட்கார்ந்து இடத்திலேயே சோழியை போட்டு உருட்டி ஒவ்வொருவரையும் அடிமையாக்கி வருகிறார். குணசேகரன் திட்டத்திற்கு அந்த வீட்டில் உள்ள பெண்கள் அடிமையாகி விட்டார்கள். இதற்கு முதல் கட்டமாக ஈஸ்வரியை அதே வீட்டில் வைக்க வேண்டும் என்பதற்காக தர்ஷனை வைத்து செண்டிமெண்ட் ட்ராமாவை போட்டு பரிகாரம் செய்வதற்கு குணசேகரன் ஒரு பக்கம் பிளான் பண்ணி விட்டார்.

இன்னொரு பக்கம் ரேணுகா மற்றும் நந்தினி இருவரையும் மறுபடியும் அடுப்பங்கரையில் போட்டு வெளியே போகாதபடி ஆணாதிக்கம் பண்ணுவதற்கு குணசேகரன் தயாராகி விட்டார். இவர்களை எல்லாம் தாண்டி இவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஜனனியையும் அடக்கி வீட்டில் உட்கார வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணிய குணசேகரன், விசாலாட்சி மூலம் காய் நகர்த்தி விட்டார்.

அந்த வகையில் ஜனனி வேலை விஷயமாக வெளியே கிளம்பும் பொழுது நந்தி மாதிரி வீட்டுக்குள் இருந்த குணசேகரன், விசாலாட்சியை தூண்டிவிட்டு விசாலாட்சிக்கு எடுபிடி வேலையை பார்க்கும் படி ஜனனி நிலைமை ஆகிவிட்டது. இதை பார்த்த குணசேகரன் இப்பொழுது தான் நம் கண்ட்ரோலுக்கு வீடும் பெண்களும் வந்து விட்டார்கள் என்ற ஆணவத்தில் சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார்.

ஆனால் தற்போது குணசேகரன் போட்ட பிளானுக்கு ஜனனி அடிபணிவது போல் இருந்தாலும் இனி அடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடியும் குணசேகரன் மற்றும் தம்பிகளுக்கு மிகப்பெரிய தர்ம அடியாக இருக்கப் போகிறது. அமைதிக்கு பின் புயல் என்பதற்கு ஏற்ப ஜனனி ஈஸ்வரி ரேணுகா மற்றும் நந்தினி அமைதியாக இருப்பது போல் இருந்தாலும் இனி அடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடியும் குணசேகரன் பிளானை தவிடுபடியாக்கும் அளவிற்கு இருக்கப் போகிறது.

இதை தான் எதிர்பார்த்தோம் என்பதற்கு ஏற்ப எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் கதை சுவாரஸ்யமாக மாறப்போகிறது. அத்துடன் ஆக்ரோஷமாக நுழைந்த அன்புக்கரசி ஆட்டமும் முடிவடைந்து விட்டது என்பதற்கு ஏற்ப குற்றவை ஜெயிலில் தூக்கி போட்டு விட்டார். அந்த வகையில் இவர்களுடைய கதையும் முடிந்து விட்டது, இனி ஜனனி மற்றும் பெண்களை காப்பாற்றுவதற்கு அப்பத்தா வீட்டுக்குள் என்டரி கொடுக்கப் போகிறார்.