சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் தற்போது 400 எபிசோடுகளை தாண்டி கோலாகலமாக வருகிறது. தற்போது என்னதான் ஆதிரையின் திருமணத்தை வைத்து உருட்டினாலும் இந்த நாடகத்தை பார்க்கும் ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை. அதற்கு காரணம் இதில் நடிக்கும் கேரக்டர்கள் தான். குணசேகரன் தான் நினைத்தபடி கண்டிப்பாக திருமணம் நடத்த வேண்டும் என்று ஒரு பக்கம் எல்லா வேலையும் செய்து வருகிறார்.
ஆனால் இதை எப்படியாவது நிறுத்திவிட்டு ஆதிரை ஆசைப்பட்ட அருண் இடம் சேர்த்து வைத்து குணசேகரனுக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஜனனி மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் அவருக்கு எதிராக வேறொரு நாடகத்தை நடத்தி வருகிறார்கள். இப்பொழுது ஜான்சி ராணி ஆதிரையை அழைத்து குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிப் போய்க் கொண்டிருக்கிறார்.
ஆதிரைக்கு துணையாக நந்தினி, ஜனனி மற்றும் சக்தி வேறொரு காரில் பின்னாடியே போகிறார்கள். அதன் பின் தான் தெரிய வருகிறது அருண் தங்கி இருக்கும் ஊருக்கு தான் போகிறோம் என்று. இதனால் கதிர் கண்ணில் அருண் மாட்டி விடக்கூடாது என்று பதட்டம் அடைகிறார் நந்தினி. ஆனாலும் ஜனனி எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் அப்படி எதுவும் நடக்காது என்று நம்பிக்கையுடன் போகிறார்.
அடுத்ததாக எல்லோரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று நல்லபடியாக பூஜையை செய்து விட்டார்கள். ஆனாலும் கதிருக்கும் நந்தினிக்கும் அங்கு நடக்கிற பிரச்சினை மட்டும் குறையவே இல்லை. நந்தினி வருகிற வழியில் அருனை பார்த்து விட ஐயையோ கதிர் பார்த்து விடக்கூடாது என்று பதட்டம் அடைகிறார். பிறகு ஜனனி, நந்தினி இடம் கதிரிடம் பேசி கொஞ்சம் டைவர்ட் பண்ணு என்று கூறுகிறார்.
இதற்கு பேசாம இவங்க போகும் போதே அந்த ஊருக்கு தான் போகிறார்கள் என்று தெரிந்த உடனேயே கௌதமுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி அலாட்டா இருக்க சொல்லி இருக்கலாம். நாடகத்தைப் பொறுத்தவரை எப்பொழுதுமே தலைய சுத்தி மூக்கை தொடுவது தான் வேலையாகவே வைத்திருக்கிறார்கள்.
எது எப்படியோ ஜனனி நினைத்தபடி இந்த கல்யாணத்தின் மூலம் குணசேகரனுக்கு பெரிய மரண அடி காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் கதிர் உடைய அடாவடித்தனத்திற்கும் சரியான பதிலடியாக இருக்கும். இதற்கிடையில் ஜனனி கொஞ்சம் ஜீவானந்தத்தையும் பற்றி யோசித்து கண்டுபிடித்தால் இன்னும் கூட பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருக்கும்.