Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் ஹைப்பை ஏற்படுத்தும் விதமாக புதுப்புது திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஆக மொத்தத்துல இந்த நாடகத்தில் மற்றவங்க சொத்துக்களை அபகரிக்கும் திட்டம் தான் போய்க் கொண்டிருக்கிறது. அப்பத்தாவின் பங்கை முதலில் ஆட்டைய போட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் குணசேகரன்.
இவரிடம் இருந்து எப்படியாவது அதை காப்பாற்ற அப்பத்தா போராடிய நிலையில் கடைசியில் அவருடைய நிலைமை கோமா ஸ்டேஜ். பிறகு கண் முழித்து பார்க்கும் போதெல்லாம் ஜனனிடம் வேதவாக்கு போல் சொன்ன பெயர் ஜீவானந்தம். அப்பொழுது நாம் நினைத்தது இவர்தான் ஜனனி மற்றும் அந்த வீட்டின் பெண்களை பாதுகாக்க வருவார் என்று.
ஆனால் தற்போது என்னவென்றால் இவரும் அப்பத்தாவின் சொத்துக்கு தான் அடி போட்டு வருகிறார். அதற்காக குணசேகரன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் போன் மூலமாகவே காலி பண்ணி விடுகிறார். அடுத்து திருட்டுத்தனமாக அப்பத்தாவின் அறைக்கு சென்று அவரிடம் கைரேகை வாங்க பார்க்கிறார்.
பிறகு மண்டபத்தில் இருக்கும் ஜனனிக்கு ஏதோ அப்பத்தாவுக்கு பிரச்சனை ஏற்பட போகிறது என்ற நிலையில் பரிதவிக்கிறார். இதற்கிடையில் மண்டபத்திற்கு வந்த குணசேகரன் ஆடிட்டர் ஏன் என்ன போன் பண்ணி இங்க வர சொன்னாங்க என்று கேட்கிறார். இதற்கு குணசேகரன் நான் எந்த போனும் பண்ணவில்லை நீங்க ஏன் கைரேகை எடுக்காமல் இங்கே வந்தீங்க என்று அர்ச்சனை செய்கிறார்.
ஒருவழியா குணசேகரனுக்கு இந்த சொத்து போகாதபடி இவருடைய கனவு சுக்கு நூறாக நொறுங்கி விட்டது. அடுத்து ஜீவானந்தம் அப்பத்தாவின் கைரேகையை வாங்கும் அளவிற்கு நெருங்கி விட்டார். அப்போது திடீரென்று ஜனனி மண்டபத்தில் இருந்து கிளம்பி சக்தியை கூட்டிட்டு குணசேகரன் வீட்டிற்கு போகிறார்.
சரியான அந்த நேரத்தில் ஜீவானந்தம் அப்பத்தாவின் கைரேகையை வாங்குகிறார். இதன் பிறகு ஜனனி இந்த உண்மையை கண்டுபிடிப்பாரா அல்லது மறுபடியும் ஜீவானந்தத்தால் அதிரை திருமணத்தில் அருண் மூலம் ஏதாவது ட்விஸ்ட் வைத்திருக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.