சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் இன்னும் கூடிய சீக்கிரத்தில் ஆதிரையின் திருமணத்திற்கு எண்டு கார்டு ஆகப்போகிறது. குணசேகரன் இந்த கல்யாணத்தை எப்படியாவது நான் நினைத்தபடி நடத்தியாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் ஆதிரை நினைத்தபடி திருமணத்தை நடத்தி குணசேகரனுக்கு பெரிய அடியை கொடுக்க வேண்டும் என்று ஜனனி மற்றும் அந்த வீட்டின் பெண்கள் இருக்கிறார்கள்.
இதற்கு இடையில் எஸ் கே ஆர் அவருடைய தம்பியை காணும் என்று அரசு, எல்லா பக்கமும் சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் அனைவரும் குணசேகரன் தான் கடத்தி வைத்துக் கொண்டு ஏதோ பிளான் பண்ணுகிறார் என்ற சந்தேகம். அதனால் ஆதிரை திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து குணசேகரனிடம் பிரச்சனை செய்கிறார் அரசு.
ஆனால் குணசேகரன், அரசு இந்த கல்யாணத்தை நடக்க விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த மாதிரி சில்லறைத்தனமான வேலைகளை செய்கிறார் என்று புரிந்து கொண்டு இவரின் தம்பிகளிடமும் மற்றும் ஜான்சி ராணி இடமும் ரொம்பவே உஷாராக இருக்க சொல்கிறார். அடுத்ததாக ஜான்சி ராணிக்கு இந்த கல்யாணம் எந்த காரணத்தை கொண்டும் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆதிரையை வீட்டில் போய் பார்த்து வருகிறேன் என்று கரிகாலனை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார்.
மேலும் ஜனனி மற்றும் மருமகள் எப்படியாவது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று மிகப்பெரிய பிளானை தீட்டி இருக்கிறார்கள். அதாவது மண்டபத்திற்கு போன பிறகு கரிகாலன் உடன் ரிசப்சனை நடந்து முடிந்த மறுநாள் குலதெய்வம் கோவிலுக்கு போகிற மாதிரி போய் ஆதிரை அருண் திருமணத்தை நடத்துவது தான்.
ஆனால் இங்குதான் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. ஆதிரையை கல்யாணம் செய்வதற்கு அருண் வருவானா என்பதன் சந்தேகம். ஏனென்றால் அருணுக்கு தெரியாமல் அவர் ஜீவானந்தம் கஸ்டடியில் போய்விடுகிறார். கௌதம் இவரை பகடைக்காயாக வைத்து எஸ் கே ஆர் இடம் பேரம் பேசப் போகிறார்.
அதனால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியே ஆதிரை அருண் திருமணம் நடந்தால் கூட அதன் பின் குணசேகரின் குணம் எந்த எல்லைக்கு போகும் என்று தெரியவில்லை. ஆனாலும் இதன் பிறகு ஜனனியும் மற்றும் அந்த வீட்டின் பெண்கள் இனி எல்லா விஷயத்தையும் துணிச்சலுடன் சுதந்திரமாக செய்யப்போகிறார்கள்.