வீரா சீரியலில் விஜி முகத்திரையை கிழிக்க வீராவுடன் கூட்டணி போட்ட கண்மணி.. ராகவனை காப்பாற்றிய மாறன்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் அனாதை ஆசிரமத்தை நடத்துவதற்கு ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண வேண்டும். அதற்கு பிள்ளைகள் அனைவரும் கையெழுத்து போட வேண்டும் என்பதால் ராகவன் மற்றும் கண்மணி கிளம்பி விட்டார்கள். ஆனால் இவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் விஜி இவர்களை காலி பண்ணுவதற்கு பிளான் பண்ணிவிட்டார்.

விஜி பிளானை தெரிந்து கொண்ட மாறன் மற்றும் வீரா, ராகவன் கண்மணியை காப்பாற்றுவதற்கு பின்னாடியே போகிறார்கள். ஆனால் அதற்குள் ராகவன் கண்மணியே பாதுகாப்பாக தள்ளிவிட்டு மரத்தில் மோதி ராகவனுக்கு விபத்து ஆகிவிடுகிறது. பிறகு அங்கே வந்த வீரா மற்றும் மாறன், ராகவனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய்விடுகிறார்கள்.

ஒரு வழியாக ராகவன் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் காப்பாற்றப்படுகிறார். ஆனால் இதில் பயந்து போனது கண்மணி தான், ஆரம்பத்தில் ராகவன் மீது விருப்பமில்லை என்றாலும் தற்போது நல்ல மனைவியாக நடந்து கொண்டார். பிறகு ஹாஸ்பிடல் அனைவரும் இருக்கும் பொழுது விஜி, ராகவனுக்கு அடிபட்டிருப்பதை நினைத்து பீல் பண்ணும் அளவிற்கு ஓவர் டிராமா பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதை பார்த்து கடுப்பான மாறன், விஜியிடம் சண்டை போடுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் வீரா, மாறனை தனியாக கூப்பிட்டு நமக்குத் தெரியும் ராகவனை விபத்து பண்ணியது விஜி தான் என்று. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட கண்மணி, விஜியின் முகத்திரையை நான் கிழித்து காட்டுகிறேன் என்று வீராவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கைகோர்க்கிறார்.

அந்த வகையில் கண்மணி, விஜி கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பிக்கிறார். உடனே விஜி, கண்மணியை பார்த்து ராகவன் மச்சான் என்றால் உங்களுக்கு அம்புட்டு உசுரா என்று கேட்கிறார். அதற்கு கண்மணி உசுராவது மண்ணாவது என்று சொல்லி உன்னுடைய நோக்கமும் என்னுடைய நோக்கமும் ஒன்றுதான். நீ இப்பதானே வில்லியா இருக்கிற, நான் ஆரம்பத்தில் இருந்தே வில்லி என்று சொல்லி விஜியை நம்ப வைத்து விட்டார்.

அந்த வகையில் கண்மணி விரித்த வலையில் விஜி சிக்கிக்கொண்டு மாட்டப் போகிறார். இந்த ஒரு விஷயத்திலேயாவது வீரா மற்றும் கண்மணி ஒன்று சேர்ந்தார்கள். கண்மணி கேரக்டரை பார்க்கும் பொழுது இதுதான் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு பார்க்கும் படியாக இருக்கிறது. எப்படியோ இவர்கள் அனைவரும் சேர்ந்து விஜியின் முகத்திரையை கிழித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள்.