பாரதியை இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்ட கண்ணம்மா.. இதுதானா உடன்கட்டை ஏறுதலா?.

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகளிடமிருந்து பொதுமக்களையும் தன்னுடைய குடும்பத்தினரையும் விடுவிப்பதற்காக பாரதி போட்ட பிளான் சொதப்பியதால், அவர்களது கையில் வசமாக சிக்கிக்கொண்டார்.

இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த தீவிரவாதிகள் அவரை கொலை செய்யாமல் தனியறையில் கட்டிப்போட்டு சித்திரவதை செய்து கண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக தீவிரவாதிகளின் ஆட்டத்தையே பாரதிகண்ணம்மா சீரியலில் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆகையால் அடுத்த வாரத்தில் போலீஸ் மற்றும் ராணுவம் மருத்துவமனையில் ஊடுருவி பொதுமக்களை, தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு  காப்பாற்றுகிறது. அந்த சமயம் கண்ணம்மா ஹாஸ்பிடலில் இருந்து தப்பித்து வெளியேறாமல் பாரதியை காப்பாற்றுவதற்காக அவர் இருக்கும் அறைக்கு செல்கிறார்.

அங்கி காட்டி வைக்கப்பட்டிருக்கும் பாரதியை காப்பாற்ற நினைக்கிறார். அப்போது பாரதி அவரை தடுக்கிறார். ஏனென்றால் பாரதி உடம்பில் வெடிகுண்டு கட்டப்பட்டிருக்கிறது. அதனால் அந்த இடத்தை விட்டு கண்ணம்மாவை ‘வெளியே போ’ என்று சொல்கிறார்.

அதைக் கேட்காத கண்ணம்மா, ‘எப்படியாவது உங்களை காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் இருவரும் சேர்ந்து செத்துவிடலாம்’ என பாரதியை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொள்கிறார்.

மனதளவில் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த காதல் இருந்தாலும், பாரதிக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் 10 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். தற்போது அவர்களையும் மீறி அவர்களது காதல் வெளிப்படுகிறது.

அந்த காலத்தில் கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. தற்போது அதையேதான் கண்ணம்மாவும் செய்கிறார். ஒருவேளை இதெல்லாம் சௌந்தர்யாவின் கனவாக கூட இருக்கலாம். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கடைசி வரைக்கும் பயபுள்ளைங்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமலயே சாக போகுதுங்க’ என்று கிண்டல் செய்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →