அய்யனார் துணை சீரியலில் நிலாவை டென்ஷன் படுத்திய கார்த்திகா.. சந்தோஷத்தில் சோழன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், யார் என்ன பண்ணாலும் கேள்வி கேட்பாரற்று நட்டாரத்தில் நின்ன சேரன் குடும்பத்திற்கு தூண் போல நிலா வந்து சேர்ந்திருக்கிறார். அதாவது தற்போது பொய் புகாரியில் சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் அனைவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று நிலாவுக்கு தெரியும்.

அதனால் எப்படியாவது இவர்களை காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். அதன்படி அண்ணன் தம்பிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகும் பொழுது போலீஸிடம் நிலா ரொம்பவே கெஞ்சுகிறார். இவர்கள் மீது எந்த தவறும் இல்லை பொய் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அதை நம்பாதீர்கள் என்று நிலா போலீசிடம் சொல்லி அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சி பண்ணுகிறார்.

இதை பார்த்த சோழன் மனசுக்குள் சந்தோஷம் வந்துவிட்டது. பிறகு போலீஸ். நிலா சொல்வதை எதுவும் கேட்காமல் அண்ணன் தம்பிகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விட்டார்கள். உடனே நிலா, நடேசன் இடம் சேரன் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார். உடனே அவர் என் பையனை பற்றி நீ சொல்லி தான் எனக்கு தெரியணும் இல்லை. அவன் மீது எந்த தவறும் இருக்காது என்று எனக்குத் தெரியும் என சொல்லிவிட்டு நேரடியாக கார்த்திகா வீட்டிற்கு போகிறார்.

அங்கே போனதும் வாசலில் நின்னு சண்டை போடுகிறார், பிறகு நிலாவும் அங்கே போயிட்டு கார்த்திகாவின் அப்பா அம்மாவிடம் கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்கிறார். ஆனால் அவர்கள் கேட்காமல் சண்டை போடுவதில் மும்பரமாக இருந்ததால் நிலா, ஜன்னல் வழியாக கார்த்திகாவிடம் பேசி நீ வந்து போலீஸிடம் சொன்னால் அவர்கள் வெளியே வந்து விடுவார்கள் என்று கூப்பிடுகிறார்.

ஆனால் அழுமூஞ்சி கார்த்திகா, அழுது கொண்டே என்னால் வர முடியாது. என் நிலமையை பார்த்தீங்களா எங்க அம்மா அப்பாவை மீறி என்னால் எதுவும் பண்ண முடியாது என்று எரிச்சல் படுத்தும் விதமாக சொல்கிறார். உடனே கார்த்திகாவை நம்பி வேலைக்காகாது என்று முடிவு பண்ணிய நிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மறுபடியும் நடந்த விஷயத்தை போலீஸிடம் சொல்கிறார்.

பிறகு நீங்கள் அந்த பெண்ணே நேராக சந்தித்து விசாரித்துப் பார்த்தால் தெரியும் என்று கார்த்திகா வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். அப்படி வந்த பொழுது கார்த்திகாவிடம் கார்த்திகாவின் அம்மா நாங்கள் சொன்னதற்கு எதிராக ஏதாவது சொன்ன என்றால் நாங்கள் என்ன பண்ணுவோம் என்று தெரியாது என மிரட்டி கார்த்திகாவை போலீஸ் முன்னாடி நிப்பாட்டுகிறார்.

உடனே போலீஸ், கார்த்திகாவிடம் நடந்த விஷயத்தை கேட்கிறார்கள். சேரன் உன்னிடம் தவறாக நடந்து கொண்டாரா என்று கேட்ட பொழுது கார்த்திகா எதையும் சொல்லாமல் அழுது கொண்டே அப்படி ஊமையாக நிற்கிறார். இதனால் நிலா ரொம்பவே டென்ஷன் ஆக கார்த்திகா என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவ்வளவு பிரச்சனை வந்ததற்கு காரணம் கார்த்திகாவால் தான்.

இப்பொழுது அம்மா அப்பாவுக்கு பயந்துகிட்டு எதுவும் உண்மை சொல்லாமல் தயங்கி நிற்பது கடுப்பாக இருக்கிறது. இதற்கிடையில் இவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்று போராடும் நிலாவின் முயற்சியை பார்த்த போலீஸ் நிலாவிடம் இவங்க எல்லாம் உனக்கு என்ன வேணும், என்ன சொந்தம் என்று கேட்கிறார். அதற்கு நிலா, நான் சோழனின் மனைவி என்று சொல்கிறார். இதை கேட்டதும் சோழனுக்கு மனசுக்குள்ள சந்தோசமாகிவிட்டது.