Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரன் மாதிரி நல்லவராக இருந்தால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள் என்று சொல்வதற்கு ஏற்ப கார்த்திகாவுக்கு சதீஷ் உடன் கல்யாணம் நடந்து முடிந்து விட்டது. கார்த்திகா நமக்கு இல்லை என்பதை புரிந்து கொண்ட சேரன் அழுது ஃபீல் பண்ணுகிறார்.
இனி பீல் பண்ண மட்டும்தான் முடியும், ஏனென்றால் சேரனுக்கு ஏற்ற பெண்ணாகவும் புரிந்து கொண்ட ஒரு காதலியாகவும் கார்த்திகா இருந்தார். ஆனால் அப்படிப்பட்ட கார்த்திகாவை உதாசீனப்படுத்திய சேரனுக்கு இப்போதைக்கு அடுத்து கல்யாணம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் சேரனின் கேரக்டருக்கு எந்த பொண்ணும் செட் ஆகவில்லை.
அதனால் கடைசி வரை அந்த குடும்பத்திற்கு ஒரு அய்யனார் போல எல்லா வேலையும் செய்து தம்பிகளின் நலனுக்காக மட்டுமே வாழ போவதாக தெரிகிறது. சேரனின் வருத்தத்தை புரிந்து கொண்ட தம்பிகள் அவர் மனதை மாற்றும் விதமாக ஜாலி பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
சேரனும் தம்பிகள் நமக்காகத்தான் ஏதோ பண்ணுகிறார்கள் என்று புரிந்து கொண்டு அவர்களுடன் ஜாலியாக இருப்பது போல் நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் தனியாக போய் அழ ஆரம்பிக்கப் போகிறார். இனி சேரன் கல்யாணம் நடக்க வாய்ப்பில்லை. ஆனால் பல்லவன் மற்றும் வானதிக்கு கல்யாணம் நடந்துவிடும்.
இப்படியே ஒவ்வொருவருக்கும் அந்த குடும்பத்தில் கல்யாணம் நடக்கும் பட்சத்தில் சேரன் மட்டும் கடைசி வரை தனியாக நிற்கப் போகிறார்.