ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், எத்தனை முறை தோற்றாலும் புவனேஸ்வரி ஆட்டம் அடங்கவே இல்லை. ஒரேடியாக ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று உயிரை எடுப்பதற்கும் துணிந்து விட்டார். ஆனால் மாயா, ரகுராமுக்கு எந்த ஆபத்து வந்துவிடக் கூடாது என்று பாதுகாத்து வருகிறார்.
புவனேஸ்வர் ஒரு பக்கம் ரகுராம் குடும்பத்தை பழிவாங்க பிளான் பண்ணி வருகிறார். இன்னொரு பக்கம் கார்த்திக், கதிர் தனம் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடாது என்பதற்காக அவ்வப்போது தனத்தை பார்த்து மிரட்டிக்கொண்டு சந்தோசமாக இருக்கக் கூடாது என்று பிரச்சனை செய்து வருகிறார்.
அதனால் அதிரடியாக களத்தில் இறங்கிய கதிர், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கார்த்திக் ஜாமின் முடிவடைந்து விட்டது என்று ஞாபகப்படுத்தி விடுகிறார். உடனே கதிரை கூட்டிட்டு போலீஸ் புவனேஸ்வரி வீட்டுக்கு சென்று கார்த்திக்கை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள்.
கார்த்திக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக புவனேஸ்வரி போலீஸிடம் கெஞ்சுகிறார். ஆனால் போலீஸ் எதையும் காது கொடுத்து வாங்காமல் கார்த்திக்கை ஜீப்பில் ஏற்றி கூட்டிட்டு போகிறார்கள். அப்பொழுது கதிர் பக்கத்தில் இருந்ததால் மொத்த கோபமும் கதிர் மீது திரும்பி விட்டது.
அதனால் புவனேஸ்வரி மூலம் கதிருக்கு ஆபத்து வரவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி வரும்பொழுது அந்த பழியை ரகுராம் மீது விழுந்து அவரை ஜெயிலுக்கு அனுப்பலாம் என்று புவனேஸ்வரி காய் நகர்த்த போகிறார். பிறகு இதிலிருந்து மாயா தான் எல்லாத்தையும் காப்பாற்றுவார்.