Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் பிசினஸ் ஆரம்பிப்பதற்கு உதவி செய்யும் விதமாக பாண்டியன் வங்கிக்கு சென்று லோன் விஷயமாக பேசி கேரண்டி கையெழுத்து போடுவதற்கு வந்துவிட்டார். ஆனால் எதிர்பார்க்காதபடி கதிருக்கு அங்கே லோன் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த கதிர் மற்றும் பாண்டியன் இருவரும் பைக்கில் பேசிக்கொண்டே வருகிறார்கள்.
அப்பொழுது கதிருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக, மளிகை கடையில் வந்து வேலை பாரு. இல்லையென்றால் சூப்பர் மார்க்கெட் போன்ற கடையை ஆரம்பி என்று சொல்கிறார். அதற்கு கதிர் எனக்கு இதெல்லாம் செட் ஆகாது, எனக்கு என்ன பண்ணனும் என்பதை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், உன்னுடன் பேசிக்கொண்டு வந்தால் எனக்கு நெஞ்சுவலி வந்துவிடும். அதனால் இங்கே இறங்கி கொள்கிறேன் என்று சொல்லி நிப்பாட்ட சொல்கிறார்.
அதனால் கதிரிடமிருந்து பாண்டியன் பாதிலேயே இறங்கி கடைக்கு போய் விடுகிறார். அடுத்ததாக கோமதியும் பழனிவேலுவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சுகன்யா டீ போடுவதற்கு டீ தூள் எங்கே இருக்கு என்று கேட்க, அதற்கு கோமதி அலட்சியமாக பதில் சொல்கிறார். உடனே சுகன்யா அடுப்பாங்கரையில் போய் வேலை பார்க்கும் பொழுது கோமதியும் போய்விடுகிறார்.
அந்த சமயத்தில் சுகன்யா, பழனிவேலுவை கண்டபடி திட்ட ஆரம்பிக்கிறார். உடனே பழனி, நீ சொன்ன விஷயத்தை நான் எங்க அக்காவிடம் சொன்னால் எங்க அக்கா மாமாவுக்கு போன் பண்ணி உடனே சொல்லிவிடும். பிறகு நீ எங்கே இருக்க முடியாது, உன் வீட்டில் தான் இருப்பாய் என்று பயமுறுத்துகிறார். உடனே கோமதி வந்து என்ன பேச்சு என்று கேட்கும் பொழுது உங்க தம்பி உங்க முந்தானையே புடிச்சுகிட்டு இருக்காரு. அதுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார்.
அதற்கு கோமதி, என் தம்பிக்கு என் மீது பாசம் அதிகம். அதனால் அவன் அப்படித்தான் இருப்பான் என்று சுகன்யாவுக்கு சரியான பதில் கொடுத்து விடுகிறார். இந்த மாதிரி திமிரு பிடித்த மனைவிடம் பழனி இப்படித்தான் இருக்க வேண்டும். அடுத்ததாக சரவணன் ராஜி இருக்கும்பொழுது கோமதி என் புருஷனை பாதிலேயே இறக்கி விட்டு போயிட்டானா என்று கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார்.
வீட்டிற்கு கதிர் வந்த பொழுது பாசத்தை காட்டும் விதமாக கோமதி, கதிர் முகத்தில் இருக்கும் வேர்வையை தொடைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு நேரம் திட்டி இப்பொழுது பாசத்தை காட்டுகிறார் என்று கோமதியின் செயல்களைப் பார்த்த சரவணன் மற்றும் ராஜி சிரித்து கொள்கிறார்கள். அதன் பின் கோமதி, பாண்டியனை இறக்கி விட்டதற்காக கதிரை திட்டுகிறார்.
பிறகு கதிர் ரூமுக்குள் சென்று ராஜிடம் லோன் கிடைக்கவில்லை, எனக்காக யாரிடமும் நீ பேச வேண்டாம். என்னுடைய திறமை வைத்து எனக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லி விடுகிறார். இதனால் விரக்தியில் இருக்கும் கதிர்க்கு உதவும் வகையில் ராஜி நகையை அடமானம் வைக்க போகிறார். ஆனால் இதனால் ஏகப்பட்ட சிக்கல்கள் வரப்போகிறது.