Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவின் சுயரூபம் என்னவென்று விஜய்க்கு புரிந்து விட்டது. உண்மையாக காதலித்து இருந்தால் இந்த அளவுக்கு தன்னை கஷ்டப்படுத்தி இருக்க மாட்டார் என்று விஜய் புரிந்துகொண்டு வெண்ணிலாவை ஓரங்கட்ட முடிவு பண்ணி விட்டார். ஆனால் இந்த வெண்ணிலா, ராகினி பசுபதி பேச்சை கேட்டு கோவிலில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார்.
அத்துடன் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸ் முன்னாடி விஜய் என் கழுத்தில் தாலி கட்டவில்லை என்றால் நான் தற்கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் போலீஸ், விஜய்க்கு போன் பண்ணி கூப்பிட்டு விட்டார்கள். கோவிலுக்கு வந்த விஜய், என்னுடைய மனைவி என்னைக்கும் காவிரி தான். இந்த வெண்ணிலவை நான் காதலித்தது உண்மைதான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது.
அதற்காக இப்பொழுது வந்து கையில் மோதிரத்தை காட்டி கல்யாணம் பண்ணு என்று சொன்னால் அதை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும். வேண்டுமென்றால் நான் அவருடைய வாழ்க்கைக்கு செட்டில்மெண்ட் பண்ணி விடுகிறேன் என்று சொல்கிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று அஜய்யின் அப்பா, வெண்ணிலாவின் குடும்பம் இறப்பதற்கு முக்கிய காரணம் விஜய் தான்.
அவர் சொல்லி தான் நான் எல்லாத்தையும் பண்ணேன் என்று வாக்குமூலமாக சொல்லிவிடுகிறார். இதனால் போலீஸ், அஜய் அப்பா மற்றும் விஜய்யை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவேரி, விஜய்க்கு சப்போர்ட் பண்ணும் விதமாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். அங்கே போலீஸ் ஸ்டேஷன் வெளியே பசுபதி ராகினி வெண்ணிலா மற்றும் மாமா அனைவரும் நின்று சதி திட்டம் போடுகிறார்கள்.
இதை பார்த்த காவிரி, இவர்களுக்கு நடுவில் விஜய் தனியாக நின்னு போராடுவது கஷ்டம். அதன்னால் நாமலே களத்தில் இறங்க வேண்டும் என்று காவேரி முடிவுக்கு வந்து விட்டார். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குள் இருக்கும் விஜயை பார்த்து பேசுவதற்காக காவேரி போகிறார். பின்னாடியே வெண்ணிலா, மாமாவை கூட்டிட்டு போகிறார்.
அப்பொழுது காவிரியை பார்த்த விஜய் ஆவலாக பேச வருகிறார். அந்த நேரத்தில் வெண்ணிலா, காவிரியிடம் எந்த உரிமையில் விஜய் இடம் பேச வந்தாய் என்று கேட்கிறார். அதற்கு காவிரி சொன்னது என்னவென்றால் நான் மட்டும் தான் அவருடைய பொண்டாட்டி, வேற எவளையும் நான் அவருக்கு சொந்தம் கொண்டாட விடமாட்டேன் என்று சரியான பதிலடி கொடுத்து விட்டார்.
இந்த காவிரி தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப துணிச்சலுடன் காவிரி களமிறங்கி விட்டார். இனி வெண்ணிலா ராகினி எல்லாத்தையும் ஓட ஓட விரட்டும் விதமாக காவிரி அனைவரையும் வச்சு செய்யப் போகிறார். அதன் பிறகு கெத்தாக விஜய்யுடன் காவேரி சேர்ந்து வாழப் போகிறார்.