காவேரி கொடுத்த தைரியம்.. வெண்ணிலாவை துணிச்சலாக டீல் பண்ண போகும் விஜய்

Mahandhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா விஜய் வீட்டு வாசலில் நின்று செண்டிமெண்டாக பேசினால் விஜய் கவுந்து விடுவார் என்று நினைத்து பேசுகிறார். ஆனால் விஜய் எதற்கும் அசுர மாட்டார், காவிரி தான் முழுக்க முழுக்க மனசில் இருக்கிறார் என்பதால் வெண்ணிலாவிற்கு புரிய வைக்கும்படி நிலைமையை எடுத்துச் சொல்கிறார்.

ஆனால் வெண்ணிலா, எதையும் காது கொடுத்து கேட்காமல் காவிரியை தவறாக பேசி பணத்துக்காக நடிக்க வந்த ஒரு டிராமா குடும்பம் என சொல்லியதால் விஜய் டென்ஷன் ஆகிவிட்டார். அந்த டென்ஷனில் விஜய் வீட்டிற்குள் இருந்த வெண்ணிலாவின் டிரஸ் பேக்கை எடுத்து வெண்ணிலாவிடம் கொடுத்து இனிமேல் இந்த வீட்டிற்குள் வருவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை என சொல்லி விடுகிறார்.

உடனே வெண்ணிலா, நாளைக்கு இதே வீட்டில் உன்னுடைய மனைவியாக நான் வந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு போய்விடுகிறார். அதே மாதிரி கோவிலில் வெண்ணிலா மனக்கோளத்தில் நின்று விஜய்க்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது பத்திரிகையாளர்கள் அனைவரும் வந்து வெண்ணிலாவிடம் கேள்வி கேட்கிறார்கள். வெண்ணிலா அவர்களிடம் சென்டிமென்ட் டிராமாவை போட்டு விஜய் நிச்சயம் இங்கே வரவேண்டும்.

நீங்கள் தான் எனக்கு ஒரு நியாயத்தை வாங்கிக் கொடுக்கணும் என போராடும் அளவிற்கு அங்கு இருப்பவர்களை கூட்டு சேர்கிறார். இதையெல்லாம் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் காவிரியின் குடும்பம் பதட்டமான நிலையில் காவிரி எந்தவித டென்ஷனும் ஆகாமல் சாப்பிட்டு பொருட்காட்சி போவதற்கு தயாராகி விட்டார். அங்கே போன இடத்தில் விஜய் மற்றும் காவிரி போன் பேசுகிறார்கள்.

அப்பொழுது காவேரி, விஜய்யிடம் உங்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். உங்க மனசில் நான் தான் இருக்கிறேன் என்று எனக்கு தெரிந்த நிலையில் வெண்ணிலா என்ன சொன்னாலும் நான் அதை நம்ப மாட்டேன். அதனால் கடைசி வரை உங்களுக்கு சப்போர்ட்டாக நான் நிற்கிறேன். நீங்கள் என்ன பண்ணனுமோ அதை தைரியமாக பண்ணுங்க என்று விஜய்க்கு ஆறுதல் சொல்லுகிறார்.

இதை தாத்தா பாட்டியும் கேட்ட நிலையில் அவர்களும் பெருமூச்சு விட்டு சந்தோஷம் அடைந்து விட்டார்கள். உடனே காவேரி கொடுத்த தைரியத்தினால் வெண்ணிலாவே துணிச்சலாக டீல் பண்ணலாம் என்ற முடிவுக்கு விஜய் வந்து விடுவார். இருந்தாலும் காவிரியை பார்த்து பேச வேண்டும் என்று பொருட்காட்சிக்கு போவார். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது பத்திரிகையாளர்கள் அதையும் பேட்டி எடுத்து விடுகிறார்கள்.

உடனே இதை பார்த்த வெண்ணிலா தற்கொலை பண்ணுவதற்கு டிராமா செய்து போலீசை வரவைத்து விடுகிறார். போலீஸ் வந்த நிலையில் விஜய்க்கு போன் பண்ணி கோவிலுக்கு வர சொல்கிறார்கள். அங்க விஜய் போனதும் பசுபதி மற்றும் அஜய் அப்பாவிடமும் விஜய் சண்டை போடும்படி சூழ்நிலை அமைந்து விட்டது. அதனால் போலீஸ் அனைவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிப்பார்கள்.