Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பசுபதி ராகினி சேர்ந்து போட்ட சதியில் தற்போது விஜய் மாட்டிக் கொண்டார். அஜய் அப்பா, வெண்ணிலா குடும்பத்தை கொலை பண்ணிய விஷயம் போலீஸ்க்கு தெரிய வந்ததும் எல்லா பழியையும் தூக்கி விஜய் மீது போட்டு விட்டார். இதனால் போலீஸ் விசாரணை செய்வதற்காக இரண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்விட்டார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவேரி, விஜய்க்கு சப்போட்டாக நிற்க வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி போய்விட்டார். போகும்போது தாத்தாவுக்கு போன் பண்ணி விஜய்யை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும், நீங்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க என்று கூப்பிட்டு விட்டார். மேலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன காவேரி இடம் வெண்ணிலா பிரச்சனை பண்ணுகிறார்.
ஆனால் காவிரி, வெண்ணிலா மூஞ்சில் கரியை பூசும் விதமாக சரியான பதிலடி கொடுத்து விட்டார். அதாவது நான் உன்னிடம் சொன்னது விஜய்க்கு விருப்பம் இருந்தால் உன் கழுத்தில் தாலி கட்டிக்கட்டும். நான் எந்தவித பிரச்சனையும் பண்ண மாட்டேன் என்னுடைய தாலியை கழட்டி கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன் என்று சொன்னேன். ஆனால் விஜய்க்கு அதில் ஒரு துளி கூட விருப்பமில்லை என்று தெரிந்து விட்டது.
அவருக்கு நான் தான் முக்கியம் என்பது எனக்கு புரிந்து விட்டது. அதனால் நான் எதற்காக அவரை உனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். உன்னுடைய சுயரூபம் என்ன என்பதும் அவருக்கு தெரிந்து விட்டது. யாருக்காகவும் எவளுக்காகவும் என்னுடைய புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார்.
அடுத்து போலீஸ் வந்த பிறகு காவிரி கேட்ட விஷயம், கடந்த ஒரு வாரமாக விஜய்யை கல்யாணம் பண்ண சொல்லி இந்த வெண்ணிலா டார்ச்சர் பண்ணுகிறார். ஆனால் இப்பொழுது குடும்பத்தை கொலை பண்ணுற விஷயத்தில் விஜயை மாட்டிவிட்டு இருக்கிறார். எப்படி குடும்பத்தை கொலை செய்தவர்களை கல்யாணம் பண்ண முடியும். இதில் இருந்தே தெரியாதா விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று.
எனக்கு கிடைக்காத விஜய் வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் வெண்ணிலா இந்த மாதிரி செய்கிறார் என்று காவேரி ஒவ்வொரு பாயின்டையும் எடுத்து சொல்கிறார். போலீசும் காவிரி சொன்னது சரிதான் என்று சொல்லிய நிலையில் அஜய்யின் அப்பா மறுபடியும் குட்டையை குழப்பி விட்டார். இதனால் போலீஸ் விசாரணை முடியும் வரை யாரும் இங்கிருந்து போகக்கூடாது என்று லாக் பண்ணி விட்டார்.
ஆனால் இவ்வளவு தூரம் நடந்ததுக்கு பிறகு வெண்ணிலாவின் சுயரூபம் என்னவென்று விஜய்க்கு புரிந்து விட்டது. அதனால் இனி எந்தவித தயங்கமும் இல்லாமல் காவிரியுடன் சந்தோஷமாக வாழலாம். கடைசியில் காவிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே நின்று பரிதவிப்புடன் இருப்பதை பார்த்து ராகினி பசுபதி சந்தோஷப்பட்டு கொள்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சனை இதோடு முடிய போகிறது என்பதற்கேற்ப காவேரி சரியான பதிலடி கொடுத்து விஜயை காப்பாற்றி விடுவார்.