Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவுக்கு செய்த சத்தியத்தின் படி விஜய்யை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று காவேரி முடிவெடுத்து விட்டார். ஆனாலும் விஜய்யை மறக்க முடியாமல் காவிரி பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இது எதுவும் தெரியாத விஜய், காவிரிக்கு போன் பண்ணி பேசலாம் என்று போன் பண்ணுகிறார். ஆனால் காவேரி விஜய்யிடம் பேச முடியாது என்று சொல்லி போனை எடுக்காமல் போய்விடுகிறார்.
இதனால் விஜய் மொட்டை மாடிக்கு சென்று வருத்தத்துடன் இருக்கிறார். அப்பொழுது எதிர்க்கே இருந்த வீட்டில் தனியாக வெண்ணிலா வாசலில் இருப்பதை விஜய் பார்க்கிறார். உடனே விஜய், வெண்ணிலாவை பார்த்து பேசுவதற்கு போகிறார். என்ன ஆச்சு ஏன் இன்னும் தூங்காமல் தனியாக இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு வெண்ணிலா தூக்கம் வரவில்லை, என்னுடைய மாமா வந்து என்னை எப்படியும் கூட்டிட்டு போய்விடுவார்.
ஆனால் நான் அங்கு போய் என்ன பண்ணுவது, இங்கே இருந்தாவது ஏதாவது வேலை பார்த்துக் கொள்வேன் என்று சொல்கிறார். உடனே விஜய் அப்படி என்றால் இங்கே இரு என்று சொன்ன பொழுது வெண்ணிலா உன் வீட்டில் எப்படி இருக்க முடியும் என்று கேட்கிறார். உங்க அப்பா அம்மா இருந்த இந்த வீட்டிலேயே இருந்து நீ வேலைக்கு போகலாம் என்று சொல்லிய நிலையில் வெண்ணிலா, உனக்கு நான் நிறைய கஷ்டத்தை கொடுத்திருக்கிறேன்.
அப்படி இருக்கும் பொழுது இப்பொழுதும் என்னை ஏன் நம்புகிறாய் என்று கேட்கிறார். அதற்கு விஜய் நான் என்னை நம்புகிறேன் என்று சொல்லி வெண்ணிலாவிடம் பேசிக்கொண்டு சமாதானப்படுத்துகிறார். அந்த வகையில் வெண்ணிலாவுக்கும் விஜய்யுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பு இல்லாத பொழுது தான் இருக்கிறது. அதனால் விஜய்யை காவேரி இடமே கொடுத்துவிட்டு வெண்ணிலா கிளம்பி விடுவார்.
அடுத்ததாக நவீன் வீட்டில் இருக்கும் பொழுது யமுனா வழக்கம் போல் பிரச்சனை பண்ணி காவிரியையும் நவீனையும் சேர்த்து வைத்து பேசுகிறார். இதைக் கேட்டு கொந்தளித்த நவீன், இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாள் நாளைக்கு உன்னுடைய பொட்டி படுக்கையை எடுத்துவிட்டு எங்கேயாவது கிளம்பி போய்விடு என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக காவிரி, குமரனிடம் என்னுடன் ஜெயிலுக்கு வரவேண்டும். அங்கு இருக்கும் பசுபதியை பார்த்து பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். அதன்படி பசுபதி பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதற்கு ஏற்ப ஜெயிலுக்கு போய்விட்டார். அடுத்ததாக காவேரி கர்ப்பமான விஷயம் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.