பிக் பாஸ் மேடையை அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கவினை அடிச்ச அளவுக்கு உனக்கு அறிவு பத்தல தம்பி

Bigg Boss Season 7: கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் கூட நிறைவடையாத நிலையில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்புகிறது. அதிலும் பிக் பாஸ் மேடையை அசிங்கப்படுத்தும் அளவுக்கு ஒரு போட்டியாளர் மட்டமான வேலையை பார்க்கிறார்.

இருக்கிற 18 போட்டியாளர்களில் வயதில் மூத்தவராக இருக்கக்கூடிய எழுத்தாளர் பவா செல்லதுரை வீட்டில் இருக்கும் எல்லா இடத்திலும், குறிப்பாக பிக் பாஸ் மேடையிலும் கூட ஆங்காங்கே எச்சில் துப்புகிறார். அவர் அணிந்திருக்கும் செருப்பையும் மற்றவர்கள் எடுத்து வந்து காலில் போட்டு விடுகின்றனர்.

நேற்று பவா செல்லத்துரை சொன்ன கதை ஹவுஸ் மேஸ்களால் பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் பிரதீப் பவா செல்லத்துரையை, ‘பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள், நீங்கள் என்னுடன் இறுதி வரை பயணிக்க விரும்புகிறேன். இப்படி எல்லாம் செய்தால் உங்களை இதை வைத்தே தூக்கி விடுவார்கள்’ என்று தேவையில்லாமல் எமோஸ்னலாகி பேசினார்.

பிரதீப் ஏற்கனவே கவின் நண்பராக அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது உள்ளே வந்து அறை விட்டவர். அப்படிப்பட்டவர் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக வந்திருக்கிறார் என்று பலரும் இவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

இதற்கு முந்தைய சீசனில் கவினை அடிச்சு, அவர் செஞ்ச தப்பை உணர்த்திய பிரதீப்புக்கு இப்போது பிக் பாஸ் வீட்டில் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியவில்லை. பவா செல்லத்துரையை தனியாக அழைத்து அவர் எச்சில் துப்புவதை பற்றி பேசி இருக்கலாம். எல்லோரும் கூடியிருந்து கதை கேட்கும்போது இந்த விஷயத்தை போட்டுடைத்தார்.

அது மட்டும் இல்லை பவா செல்லதுரை பிக் பாஸ் வீட்டில் எச்சில் துப்புவதை தன்னுடைய கையால் தான் அகற்றுவதாகவும் பிரதீப் சொன்னார். ஆனால் உண்மையில் கேப்டன் விஜய் தான் அதை சுத்தம் செய்திருப்பது பின்பு அம்பலமானது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →