கயல் சீரியலில் மோசமாக நடந்து கொள்ளும் கயலின் அண்ணி.. வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து அவதிப்படும் எழில்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், திரும்பிய இடமெல்லாம் பிரச்சனை வைத்தே கதையை கொண்டு வந்து தற்போது எப்படி முடிக்கிறது என்று தெரியாமல் இயக்குனர் தடுமாறிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இதுவரை கயலுக்கு வெளியில் இருந்து தான் ஏகப்பட்ட பிரச்சனை வந்தது. ஆனால் அதை எல்லாம் சமாளித்த கயல் தற்போது வீட்டில் நடக்கும் குளறுபடியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

அதாவது ஆரம்பத்திலிருந்து கயலின் அண்ணியை நல்ல கேரக்டரில் காட்டிவிட்டு தற்போது பணத்துக்காக கேரக்டரை மாறும் விதமாக மோசமான அண்ணியாக மாறிவிட்டார். கயல், எழிலுக்காக ட்ராவல்சை ஆரம்பிக்க வேண்டும் என்று 10 லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ணி வைத்திருக்கிறார்.

இந்த பணத்தை வைத்து தன்னுடைய புருஷன் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் அண்ணி கொடூர வன்மத்தை காட்டும் விதமாக மோசமாக நடந்து கொள்கிறார். அந்த வகையில் எழில் சாப்பிடும் பொழுது அவமானப்படும் அளவிற்கு ஊமையாக இருந்து கயலின் அண்ணி கஷ்டப்படுத்தி விட்டார்.

இதனைப் பார்த்த ஷாலினி திட்டு வாங்கியதோடு மட்டுமில்லாமல் உண்மையை சொல்ல முடியாமலும் தவிக்கிறார். ஊமையாக இருந்து இந்த தனம் பண்ணும் வில்லத்தனம் யாருக்கும் தெரிய மாட்டேங்குது. இதை ஷாலினி, கயலிடம் சொல்ல வரும்போது எழில் சொல்ல விடாமல் தடுத்து விடுகிறார்.

ஆக மொத்தத்தில் எப்படி இருந்த எழில், கயலை காதலித்து கல்யாணம் பண்ணிய ஒரு காரணத்திற்காக வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார். இதற்கெல்லாம் ஒரு வகையில் கயலும் தான் காரணம், கல்யாணம் ஆன பிறகு எழிலை கூட்டி தனி குடித்தனம் போயிட்டு அதன் பிறகு கூட கயல், குடும்பத்திற்கு உதவி செய்திருக்கலாம்.

எப்பொழுதும் குடும்பத்தை பற்றி மட்டுமே யோசிக்கும் கயல், எழிலை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அதனால் தான் ஒவ்வொரு நாளும் எழில் அவமானப்பட்டு வருகிறார். அட்லீஸ்ட் எழில் கார் ஓட்டுனர் வேலையை பார்த்து இருந்தாலாவது கொஞ்சமாவது சம்பாதித்து மரியாதை கிடைத்திருக்கும். அதையும் இந்த கயல் கெடுத்து விட்டு புருஷனின் சந்தோசத்தையே பறித்துவிட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →