குமரன் உயிருக்கு பசுபதியால் வந்த ஆபத்து.. விஜய்யை காப்பாற்ற நவீன் எடுத்த முயற்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலவின் மாமாவை கண்டுபிடித்து கூட்டிட்டு வர வேண்டும் என்று குமரன் திண்டுக்கலுக்கு போனார். அங்கே போன இடத்தில் வெண்ணிலாவின் மாமா வீட்டுக்கு வராமல் பசுபதி கஸ்டடியில் இருப்பதை தெரிந்து கொண்டார். உடனே வெண்ணிலாவின் அத்தையை வைத்து மாமாவுக்கு போன் பண்ணி இருக்கும் இடத்தை குமரன் நைசாக வாங்கி விட்டார்.

அந்த வகையில் வெண்ணிலாவின் மாமா இருக்கும் இடத்தை நவீனுக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார். நவீன் சரி இங்க வந்து பார்த்துக் கொள்ளலாம் நீங்க பஸ்ஸில் வர வேண்டாம். எல்லா இடத்திலும் பசுபதி ஆட்கள் இருப்பார்கள். அதனால் ஒரு கார் பிடித்து வந்துவிடுங்கள் என்று சொல்லிவிடுகிறார். அதன்படி குமரனும் காரில் ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் நவீன், ராகினியை பாலோ பண்ணி பசுபதி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் விஷயமாகப் போகிறார். அந்த வகையில் ராகினி, பசுபதி இடத்திற்கு போனதும் நவீன் அதை பார்த்து விடுகிறார். பிறகு வெண்ணிலாவுக்கு அவ்வப்போது ஞாபகம் வருகிறது என்று போன் மூலம் பசுபதி தெரிந்து கொண்டார்.

உடனே வெண்ணிலா கதையை முடிப்பதற்கு அடியாட்களிடம் சொல்லிவிடுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நவீன், வெளியே வந்து காவிரியிடம் தகவலை சொல்லி வெண்ணிலாவே காப்பாற்ற சொல்லுகிறார். அடுத்ததாக குமரன் காரில் வரும் பொழுது பசுபதி ஆட்கள் குமரனை பிடித்து விடுகிறார்கள்.

அவர்களிடம் சண்டை போட்டு தப்பிக்கும் பொழுது வசமாக சிக்கிக்கொண்டார். உடனே பசுபதி ஆட்கள் கத்தியால் குமரனை குத்துவதற்கு போகிறார்கள். ஆனால் குமரன் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி அங்கிருந்து எஸ்கேப் ஆகி சென்னைக்கு போய்விடுவார்.