Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிரின் பிசினஸுக்காக பாண்டியன் உதவி செய்யும் வகையில் கேரண்டி கையெழுத்து போடுவதற்காக வங்கிக்கு கூட்டிட்டு போய்விடுகிறார். அங்கே போகும் பொழுது சக்திவேல் பாண்டியனும் சந்திக்கிறார்கள்.
அப்பொழுது சக்திவேலுக்கு குமரவேலுவை ஜெயிலுக்கு அனுப்பிய கோபத்தால் பாண்டியனிடம் பிரச்சினை பண்ணுகிறார். பிறகு அங்க வந்த கதிரும் அப்பாவுக்கு சப்போர்ட் ஆக சக்திவேலுவிடம் பேசுகிறார். ஆனால் பாண்டியன், சக்திவேலுக்கு பதிலடி கொடுத்து அனுப்பியதால் உச்சகட்ட கோபத்தில் சக்திவேல் இருக்கிறார்.
பிறகு இந்த பிரச்சினையை முடித்துவிட்டு வங்கிக்கு போனதும் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்ட பாண்டியன் வட்டி அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால் கதிர் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிய பொழுது பாண்டியன் கேரண்டி கையெழுத்து போடுவதற்கு தயாராகி விட்டார்.
அடுத்ததாக மீனாவும் ராஜியும் பேசிக்கொண்டு வரும்பொழுது எதிர்க்கே வந்த ராஜி அம்மாவும் சித்தியும் சந்திக்கிறார்கள். அப்பொழுது ராஜி, சித்தியிடம் பேசப் போகும் பொழுது குமரவேலு ஜெயிலுக்கு அனுப்பி இதை நினைத்து கோபப்படும் விதமாக இவ்வளவு தூரம் பிரச்சினை வந்ததற்கு காரணம் நீதான் என்று ராஜி கல்யாணத்தை பற்றி பேசுகிறார்.
நீ ஓடிப் போகாமல் இருந்திருந்தால் அவனுக்கு பழிவாங்க வேண்டும் என்று எண்ணம் வந்திருக்காது. உன்னை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினை பண்ணி தற்போது என்னுடைய பையன் ஜெயிலுக்குள் இருக்கிறான் என்று வாய்க்கு வந்தபடி ராஜியிடம் மொத்த கோபத்தையும் காட்டிவிடுகிறார்.
உடனே இவர்கள் போனதும் ராஜி, கல்யாணத்துக்கு முதல் நாள் என்ன நடந்தது எப்படி என்னுடைய கல்யாணம் நடந்தது என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டால் அவர்களுடைய கோபம் குறைந்து விடும். அவங்க அவங்க வாழ்க்கையை பார்த்துக் கொள்வாங்க. நான் உண்மையை செல்ல போகிறேன் என்று மீனாவிடம் சொல்கிறார்.
மீனா இப்ப இருக்க பிரச்சனைக்கு இது தேவையா என்று யோசித்துப் பாரு என சொல்கிறார். ஆனால் ராஜி, தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களின் கோபம் குறைய வேண்டும் என்றால் கல்யாணத்தின் ரகசியத்தை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் கதிர் ராஜி கல்யாணம் விஷயம் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.