அரசி கையில் சிக்கி ஊசலாட போகும் குமரவேலு.. பாண்டியன் குடும்பத்திற்கு கர்மா கொடுத்த பதிலடி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசியை வைத்து பாண்டியனை பழிவாங்கலாம் என்று சக்திவேல், குமரவேலு மூலம் பிளான் போட்டார். இந்த குமரவேலும் அதற்கேற்ற மாதிரி காய் நகர்த்தி வந்து அரசி மூலம் பாண்டியனை அசிங்கப்படுத்தி விட்டார். ஆனால் தற்போது அரசி குமரவேலுமிடம் மாட்டவில்லை.

குமரவேலு தான் அரசிடம் சிக்கிக் கொண்டார் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் ரண வேதனையை குமரவேலு அனுபவிக்கப் போகிறார். அந்த வகையில் சுகன்யா அரசியை கூட்டிட்டு சக்திவேல் வீட்டுக்கு வந்து விடுகிறார். வந்ததும் அரசி சகஜமாக அந்த வீட்டில் இருப்பதை பார்த்து கடுப்பான குமரவேலு கோபத்தை காட்டுகிறார்.

உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது இந்த வீட்டில் இருப்பதற்கு. ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்று குமரவேலு கத்துகிறார். அதற்கு அரசி இந்த வீட்டில் இருப்பதற்கு எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று கெத்தாக பதில் சொல்கிறார். உடனே குமரவேலு நான் யாரென்று தெரியாமல் என்னுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாய்.

உன் கழுத்தில் இருக்கும் தாலிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று போய் அனைவரிடமும் சொல் என்று சொல்கிறார். அதற்கு அரசி முடியாது என்று சொல்லி வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார். உடனே குமரவேலு உன் வீட்டில் இருப்பது போல் இங்கே நடந்து கொள்கிறாய் என்று கத்த ஆரம்பிக்கிறார்.

உடனே அரசி கையில் இருந்த கத்தியை எடுத்துட்டு குமரவேலுக்கு கழுத்தில் வைத்து என் பக்கத்தில் வருவதற்கு உனக்கு எந்த காலத்திலும் தைரியம் வரக்கூடாது. மீறி வந்துச்சுன்னா அப்படியே சொருகி விடுவேன் என்று ஆக்ரோஷமாக கோபத்தை காட்டி விட்டார். இதை எதிர்பார்க்காத குமரவேலு அப்படியே அதிர்ச்சியாகிவிட்டார்.

இனி ஒவ்வொரு நாளும் அரசி கையில் சிக்கிக் கொண்டு குமரவேலு சித்திரவதை அனுபவிக்கப் போகிறார். இதனால் சக்திவேலும் நிம்மதி இல்லாமல் தவிக்கப் போகிறார். என்னதான் இங்கே அரசி தைரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பாண்டியனையும் பாண்டியன் குடும்பத்தை நினைத்தாலும் பாவமாக தான் இருக்கிறது. ஆசை ஆசையாக வளர்த்த பொண்ணு கல்யாணத்தில் அவமானப்படுத்திவிட்டு ஓடிப் போய்விட்டாள் என்று தலை குனிந்து போய் நிற்கிறார்.

ஆனால் இதுதான் கர்மா என்று சொல்வார்கள், ஏனென்றால் என்னதான் கோமதியே காதலித்து பாண்டியன் கல்யாணம் பண்ணாலும் சக்திவேல் முத்துவேல் எதிர்த்து தான் திருட்டுத்தனமாக கோமதி கழுத்தில் பாண்டியன் தாலி கட்டினார். அதே மாதிரி ராஜி கல்யாணமும் அப்படி தான் நடந்தது. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து பாண்டியனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்மா வேலையை காட்டி விட்டது.