போலீசை வைத்து லக்ஷ்மி போட்ட பக்கா திட்டம்.. பெரிய அக்கப்போராய் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் எட்டு வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்து கொள்ள கண்ணம்மாவிடம் வளரும் லஷ்மி பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் லட்சுமிக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

இவ்வாறு இருக்க லஷ்மி தன்னுடைய தோழியின் அம்மா போலீஸ் என்பதால், அவர் மூலம் என்னுடைய அப்பாவை கண்டுபிடித்த லட்சுமி முயற்சி செய்கிறார். இதற்கு அந்த போலீஸ் ஏதாவது ஒரு ஆதாரம் வேண்டும் என லட்சுமியிடம் தெரிவித்திருக்கிறார். இதற்காக லஷ்மி வீட்டில் ரேஷன் கார்டு அல்லது அப்பா அம்மா திருமண புகைப்படம் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்க்கிறாள்.

அதுவும் இல்லாததால் பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் ஆசிரியர் பிறப்புச் சான்றிதழ் சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது லஷ்மிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஒரே நாள், ஒரே நேரம், ஒரே வருடம் என அனைத்தும் ஒன்றாக இருக்கும் நாளில் ஹேமாவும் லஷ்மியும் சேர்ந்து பிறந்திருக்கும் போது ஹாஸ்பிடலும் ஒன்றாக இருந்திருக்கலாமே என லஷ்மி யோசிக்கிறாள்.

ஆகையால் இந்த விஷயத்தில் ஹேமாவும் லஷ்மிக்கு உதவி செய்து, அவர் பிறந்த ஆஸ்பத்திரியில் லஷ்மியின் அப்பாவின் வீட்டு விலாசம் அல்லது ஏதாவது ஒரு ஆதாரத்தை தேட இருவரும் முயற்சிக்கின்றனர்.

பிறகு லஷ்மிக்கு பாரதிதான் தன்னுடைய அப்பா என்ற விஷயம் தெரிந்தால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் சீரியலின் இயக்குனர் அதை சஸ்பென்ஸாகவே வைக்கப் போகிறார்.

இருப்பினும் பாரதிகண்ணம்மா சீரியலில் தன்னுடைய அப்பாவை ஆர்வத்துடன் தேடும் லஷ்மி, கூடிய விரைவில் பாரதி தான் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.