சின்னத்திரையில் எப்போதுமே நகைச்சுவையாக பேசி மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் காமெடி நடிகர் மதுரை முத்துவின் சொந்த வாழ்க்கை சோகங்கள் நிறைந்த ஒன்றாகவே இருந்துள்ளது. இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு, குக் வித் கோமாளி கொண்ட நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியில் கில்லாடியாக இருப்பதால் இவருடைய நகைச்சுவையான பேச்சு பலரையும் கவர்ந்திருக்கிறது.
மேலும் மேடைப் பேச்சாளராகவும் பட்டிமன்ற நடுவராகவும் இருக்கும் மதுரை முத்து, லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அதன் பிறகு தனது 32-வது வயதில் மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை சில மாதத்திலேயே மறுமணம் செய்து கொண்டு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இப்போது மதுரை முத்து தனது முதல் மனைவியை குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டு பலரையும் கலந்து வைத்திருக்கிறார்.
மதுரை முத்துவின் முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இறந்த நிலையில் ஒரு பெண் குழந்தையுடன் அவர் படும் கஷ்டத்தைக் கண்டு வருத்தப்பட்டு அவரை மறுமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இவர்களது திருமணத்திற்கு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் பல எதிர்ப்புகளை தாண்டியே மதுரை முத்து-லேகா திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் அதுவும் கொடுத்து வைக்காமல் அவர் பாதியிலேயே மதுரை முத்துவை விட்டு சென்ற கொடுமை நிகழ்ந்து இருக்கிறது.
பின் மதுரை முத்து வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்காகவே முதல் மனைவி லேகாவின் தோழி நீத்துவை 2-வது திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.