தற்போது எங்கு பார்த்தாலும் சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுவது தயாரிப்பாளர் ரவீந்தர்- சீரியல் நடிகை மகாலட்சுமியின் திருமண பேச்சுதான். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இன்னிலையில் மகாலட்சுமி பணத்தாசை படித்தவர். பணத்திற்காக பணங்காசு இருப்பவரிடம் பசை போல் ஒட்டிக் கொள்வதற்காக இந்த திருமணத்தை செய்து கொண்டிருக்கிறார் என இவரைப்பற்றிய நெகட்டிவ் கமெண்ட்டுகள் சமூக வலைதளங்களில் குவிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகாலட்சுமி அதற்கு காட்டமாக பதிலளித்திருக்கிறார். பணத்திற்காகதானே இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்றுக் கொண்டீர்கள்? என அனைவரும் மகாலட்சுமியை இஷ்டத்திற்கு கலாய்த்தனர்.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்துவிட்டார் மகாலட்சுமி. ரவீந்தர் வைத்து பொழப்பு நடத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கிறது.
சீரியல் நடிகையாக இருக்கும் எனக்கு மாதத்திற்கு 3 லட்சம் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டும் என கேலி கிண்டல் செய்பவர்களுக்கு மகாலட்சுமி காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தொடர்ந்து பல பேட்டிகளின் மூலம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாலும், அவர்களைக் குறித்த உருவ கேலி, கிண்டல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதற்கெல்லாம் பதிலாக அனைவரும் மூக்கில் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இருவரும் வாழ்ந்து காட்டப் போவதாகவும் சவால் விட்டுள்ளனர்.