பசுபதிக்கு தண்ணீ காட்டிய காவிரி.. விஜய்யிடம் வாங்கிக்கிட்டிய யமுனா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கொடைக்கானலில் இருக்கும் காவிரி வீட்டுக்கு பசுபதி சென்று பிரச்சினை பண்ணுகிறார். இந்த பசுபதியை நான் டீல் பண்ணுகிறேன் என்று குமரனை கூட்டிட்டு காவேரி கொடைக்கானலுக்கு போய்விட்டார். இந்த விஷயத்தை நவீன் மூலம் கேள்விப்பட்ட விஜய், கர்ப்பமாக இருக்கும் பொழுது காவிரி ஏன் அவ்வளவு தூரம் காரில் போக வேண்டும்.

தனி ஆளாக காவிரி எப்படி அந்த பசுபதியை சமாளிக்க முடியும், நானும் போகிறேன். அப்பொழுதுதான் அந்த பசுபதிக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்று கொந்தளிக்கிறார். அதற்கு நவீன், நீங்கள் போன தேவையில்லாத பிரச்சினை வரும். காவேரி அம்மா, காவேரி சொல்லித்தான் நீங்க வந்து இருக்கீங்க என்று காவிரியை திட்டுவாங்க.

அதனால் கொஞ்சம் பொறுமையாக இருங்க காவிரியை சமாளித்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் என்று நவீன், விஜய்யை சமாதானப்படுத்துகிறார். அப்பொழுது நவீனுக்கு போன் வந்ததால் நவீன் பேசப் போய் விடுகிறார். உடனே யமுனா, விஜயை பார்த்து நவீனுக்கும் காவிரிக்கும் இருக்கும் உறவை தவறாக சொல்கிறார்.

இதைக் கேட்டு கோபப்பட்ட விஜய், நவீனை பற்றி எனக்கு தெரியும், அதைவிட என் பொண்டாட்டி காவிரி எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். உனக்கு நவீனை பற்றியும் தெரியவில்லை, உன் கூட பிறந்த அக்கா காவேரி எப்படிப்பட்டவள் என்பதும் புரியவில்லை. இதில் வேற நீ கலெக்டர் படிச்சு என்னத்த சேவை செய்யப் போகிறாய் என்று திட்டி விடுகிறார்.

இதனால் விஜய் இடம் அடுத்து எதுவும் பேச முடியாமல் யமுனா அடங்கி விடுகிறார். அடுத்ததாக காவிரி வீட்டிற்கு பசுபதி ராகினி அடியாட்களுடன் வந்து வீட்டிற்குள் இருக்கும் பொருள்களை தூக்கி வெளியே போட சொல்கிறார். இதை பார்த்து கோபப்பட்ட காவேரி அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் தொடக்கூடாது என்று சொல்லி பிரச்சனை பண்ணுகிறார்.

அப்பொழுது பசுபதி ஆட்களை அடிக்கும் விதமாக கையில் இருக்கும் பொருளை வைத்து அடித்து விடுகிறார். இதனால் பசுபதி ராகினி மற்றும் அடியாட்கள் அனைவரும் வெளியே ஓடிப் போய் விடுகிறார்கள். பிறகு ஆக்ரோஷமாக இருக்கும் காவிரியை சமாதானப்படுத்தும் விதமாக போலீஸ் காவேரியிடம் பேசுகிறார்கள். ஆனால் இதெல்லாம் போலீஸ் வந்தாலும் சரி ஆகாது, விஜய் வந்தால் தான் பசுபதி அடங்குவார். அப்பொழுதுதான் இந்த பிரச்சினையும் முடிவுக்கு வரும்.