Mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில், காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துக் கொண்டு வருகிறார். இதனால் காவேரி மாத்திரை போடும் பொழுது சாரதா பார்த்துவிட்டு ஏன் இவ்வளவு மாத்திரை போடுகிறாய் என்று கேட்கிறார். உடனே கங்கா இது என்னுடைய மாத்திரை மாதிரி இருக்கிறது என்று சந்தேகப்பட்டு கேட்கிறார்.
அதற்கு வழக்கம் போல் காவிரி சில பொய்களை சொல்லி சமாளித்து விடுகிறார். அடுத்ததாக காவிரி கோவிலுக்கு போயிட்டு விஜய் நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார். அந்த நேரத்தில் விஜய்யும் கோவிலுக்கு வந்து காவிரியுடன் பேசுகிறார். உனக்கு என்ன ஆச்சு திடீரென்று ஏன் இப்படி மாறிவிட்டாய்.
என்னை கொஞ்சம் கூட மதிக்கிறதே இல்லை, உன் இஷ்டத்துக்கு எல்லாம் முடிவும் எடுக்கிறாய். என் பிள்ளையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாய் என்று நினைப்பில்லாமல் கொடைக்கானலுக்கு போய் பசுபதியுடன் சண்டை போட்டு இருக்கிறாய். நான் வந்து பிரச்சினையை முடிக்கிறேன் என்று சொன்னாலும் என்னையும் வரவிடாமல் ஆகிவிட்டாய்.
என்னதான் நினைக்கிறாய் என்று காவேரி இடம் விஜய் கேட்கிறார், ஆனால் காவேரி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்த நிலையில் விஜய் தொடர்ந்து காவிரியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கோவிலுக்கு வந்த சாரதா இவர்கள் இருவரும் பேசியதை பார்த்து எதுவும் சொல்லாமல் அமைதியாக வீட்டுக்கு போய் விடுகிறார். அந்த வகையில் சாரதாவிற்கு, காவிரியையும் விஜயையும் ஒன்று சேர்த்து வைக்கலாம் என்று ஒரு நினைப்பு வந்து விட்டது.
ஆனால் இதை கெடுக்கும் விதமாக காவிரி வீட்டில் இருக்கும் பொழுது விஜயின் பாட்டி சித்தியும் வீட்டிற்கு வருகிறார்கள். வந்ததும் காவிரியிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுத்து இதில் கையெழுத்து போட்டு என் பேரனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லு என கேட்கிறார்.
இதனால் காவிரி உண்மையும் சொல்ல முடியாமல் கையெழுத்து போட முடியாமல் தவிக்கிறார். ஆனால் சாரதா, காவிரியின் கஷ்டத்தை புரிந்து விஜய் உடன் சேர்த்து வைப்பதற்கு பச்சைக்கொடி காட்டப் போகிறார்.