மகாநதி சீரியலில் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு காவேரி வீட்டுக்கு போன விஜய்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், சாரதாவிடம் தான் கர்ப்பமாக இருக்கிற விஷயத்தை காவிரி சொல்கிறார். இதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிய நிலையில் சாரதா, இனி இதை வைத்து பணத்துக்காக ஆசைப்பட்டு இந்த மாதிரி காரியத்தை பண்ணியிருக்க என்று நம்ம குடும்பத்தின் மீது மொத்த பழியையும் தூக்கி போடுவார்களே என்று கவலையுடன் பேசுகிறார்.

அதற்கு காவிரி ஆறுதல் சொல்லிய நிலையில் சாரதா அந்த தம்பி விஜயை வர சொல்லு நான் பேச வேண்டும் என்று சொல்கிறார். உடனே காவிரி, விஜய்க்கு வாய்ஸ் மெசேஜில் தகவலை சொல்லி விடுகிறார். இதை கேட்டதும் சந்தோஷத்தில் விஜய் வீட்டிற்கு வருகிறார். அப்படி வரும்பொழுது பாட்டியும் சித்தியும் சேர்ந்து காவேரியிடம் சொன்ன விஷயத்தையும் விவாகரத்து கேட்டதையும் தெரிந்து கொள்கிறார்.

உடனே பாட்டியிடம் சண்டை போட்டு இனி நான் இங்கே இருக்க போவதில்லை என்று சொல்லி பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு காவிரி வீட்டிற்கு விஜய் கிளம்பி விடுகிறார். அங்கே போனதும் சாரதா, ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணிக் கொண்டு இப்படி ஒரு குழந்தை கொடுத்தது நியாயமா என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு விஜய் கொடுத்த பதில் என்னவென்றால் மனதார நாங்கள் கணவன் மனைவி என்று நினைத்த பிறகு தான் ஒன்று சேரவே ஆரம்பித்தோம். அதனால் எங்களுக்குள் எல்லா பந்தமும் இருக்கிறது என்று சாரதாவுக்கு புரியவைத்து அங்கே தங்குவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் சாரதாவும், பாட்டி சித்தி கோபம் குறையும் வரை இங்கே விஜய் இருக்கட்டும் என்று சம்மதத்தை கொடுத்து விடுகிறார்.