காவேரியை சீண்டியதால் பசுபதிக்கு விஜய் கொடுத்த தண்டனை.. துடிக்கும் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஜாமினில் வெளியே வந்த பசுபதி, காவேரி வீட்டுக்கும் விஜய் வீட்டுக்கும் சென்று மிரட்டினார். ஆனால் காவிரி விஜய் இரண்டு பேருமே சரியான பதிலடி கொடுத்து பசுபதியை வெளியே அனுப்பி விட்டார்கள். ஆனால் விஜய்க்கு காவேரி வீட்டிற்கு சென்று மிரட்டியது குமரன் மூலமாக தெரிந்து விட்டது.

இதனால் ஆக்ரோஷமான விஜய் நேரடியாக பசுபதி வீட்டுக்கு சென்று என்ன தைரியம் இருந்தால் என்னுடைய பொண்டாட்டியை நீ மிரட்டும் அளவிற்கு போய் இருப்பாய். காவிரியையும் காவிரி குடும்பத்தையும் சீண்டாதபடி நான் உனக்கு வைத்தியம் பண்ண தான் வந்திருக்கிறேன் என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

குறுக்கே வந்த ராகினியை விஜய் உட்கார வைத்துவிட்டு பசுபதி கையை உடைத்து மாவு கெட்டு போடும் அளவிற்கு தண்டனை கொடுத்து விட்டார். இனி எந்த காரணத்தை கொண்டும் காவிரி இருக்கும் பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது. இல்லை என்றால் உன்னை நான் உயிரோடயே விடமாட்டேன் என்று மிரட்டி விட்டு போய்விடுகிறார்.

பசுபதியின் வேதனையையும் வலியையும் பார்த்து தாங்க முடியாமல் ராகினி துடித்து போய் இருக்கிறார். அதனால் இனி இவங்க சகவாசமே நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொள்ளலாம் என ராகினி, பசுபதி இடம் சொல்கிறார். ஆனால் திருந்தாத பசுபதி, விஜய்யை மிரட்டினால் காவேரிக்கு வலிக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் காவேரி மிரட்டினத்துக்கு இவன் இந்த அளவுக்கு வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இதை இப்படியே சும்மா விடமாட்டேன், காவிரிக்கு கொடுக்கும் கஷ்டத்தை பார்த்து இவன் இனி ஒவ்வொரு நாளும் அவஸ்தைப்பட போகிறான் என்று பசுபதி கோபத்தை காட்டுகிறார்.

அந்த வகையில் இனி காவிரி மற்றும் விஜய்க்கு இடையில் பசுபதி ஆட்டம் ஓவராக தான் இருக்கப்போகிறது. இதற்கிடையில் காவிரியின் கர்ப்பமான விஷயம் வெளிவர வேண்டும். அத்துடன் காவேரி இடமும் காவேரி குடும்பத்திடமும் பாட்டியும் சித்தியும் போயி செண்டிமெண்டாக பிளாக்மெயில் செய்த விஷயமும் விஜய்க்கு நவீன் மூலம் தெரியப்போகிறது.