Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை மக்களை அதிக அளவில் கவர்ந்தாலும், கதைகள் அவ்வப்போது தடுமாறிக் கொண்டு வருகிறது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து இந்த நாடகத்தை பார்ப்பதற்கு ஒரே காரணம் முத்து மற்றும் மீனாவின் எதார்த்தமான நடிப்பு தான்.
அதே மாதிரி மக்களின் பேவரிட் சீரியல் என்று சொல்லும் அளவிற்கு மகாநதி சீரியல் மகளிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி, காதல், பார்ப்பவர்களை ஈர்த்ததால் இவர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் வர ஆரம்பித்து விட்டார்கள். அதனாலேயே இந்த சீரியல் ஹிட் அடித்து இருக்கிறது.
அந்த வகையில் மகாநதி சீரியலை ரீமேக் பண்ணும் விதமாக மலையாளத்தில் வரப்போகிறது. இதை ஏசிநெட் சேனல் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். இதில் காவிரி கதாபாத்திரத்தில் நடிக்க போகும் கதாநாயகி யார் என்றால் சிறகடிக்கும் ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா தான்.
ஆனால் இவர் ஏற்கனவே மலையாளத்தில் சிறகடிக்கும் ஆசை சீரியலை நடித்துக் கொண்டு வருகிறார். அப்படிப்பட்டவருக்கு அடுத்த வாய்ப்பாக மகாநதி சீரியலும் கிடைத்திருக்கிறது. இந்த சீரியல் மூலம் காவிரி ஆக கோமதி பிரியா கலக்கப்போகிறார்.