ராகினியை கூட்டிட்டு காவேரி வீட்டுக்கு போகும் பசுபதி.. விஜய்யிடம் உண்மையை சொல்லும் நவீன்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி எதற்காக விஜய் கூப்பிட்டும் போகாமல் இருக்கிறார் என்று தெரியாமல் நவீன் காவிரியிடம் கோபப்பட்டு பேசுகிறார். அப்பொழுது குமரன் வந்து விஜய்யின் சித்தி வந்து மிரட்டி விட்டு செண்டிமெண்டாக பிளாக்மெயில் பண்ணுகிற விஷயத்தை சொல்லிவிடுகிறார்.

நவீன், இதற்காக தான் விஜய் கூப்பிட்டும் நீ போகாமல் இருந்தியா என்று கேட்கிறார். அதற்கு காவேரி அவங்க சொல்றதும் உண்மைதான். நான் விஜய் வாழ்க்கையை விட்டு விலகி வந்தால் தான் விஜய் சந்தோசமாக இருப்பார். அதனால் இனி நான் விஜய் இருக்கும் பக்கம் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

அதே மாதிரி இந்த விஷயத்தையும் விஜய் இடம் சொல்லக்கூடாது என்று காவேரி கூறிவிட்டார். ஆனாலும் நவீன் நடந்த உண்மையை விஜய் இடம் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இதெல்லாம் பண்ணிவிட்டு எதுவும் தெரியாத மாதிரி பாட்டி, விஜய் இடம் சென்று எல்லா பிரச்சனைக்கும் காரணம் காவிரி தான் காரணம் என்று பேசி விஜய் மனசையும் மாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறார்.

ஆனால் விஜய் மனசு என்ன ஆனாலும் மாறாது, அத்துடன் காவிரி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயம் அனைவரும் காவிரியை ஏற்றுக்கொள்வார்கள். அந்த விஷயம் கூடிய சீக்கிரத்தில் வெளிவர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காவிரியின் பாட்டிக்கும் காவிரி வயிறு பார்த்து சந்தேகம் வந்துவிட்டது.

இதனை அடுத்து லாக்கப்பில் இருந்த பசுபதி வெளியே வந்து விடுகிறார். வெளியே வந்ததும் ராகினியை கூப்பிட்டு காவிரி வீட்டுக்கு சென்று மிரட்டும் விதமாக அனைவரையும் மறுபடியும் பாடாபடுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால் காவேரி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறுபடியும் பசுபதியுடன் மல்லு கிட்ட போகிறார்.