Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பசுபதி, காவிரி வீட்டிற்கு சென்று காவேரி குடும்பத்தையும் காவிரியையும் பழிவாங்காமல் விடமாட்டேன் என்று சவால் விடும் அளவிற்கு பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார். பசுபதியின் செயல்களை பார்த்து கொந்தளித்துப் போன காவேரி, உன்னால தான் எனக்கும் என் குடும்பத்துக்கும் பிரச்சினை.
உன்னை உயிரோடையே விடமாட்டேன் என்று கோபமாக அடிப்பதற்கு போய் விடுகிறார். உன்னை நான் சும்மா விட மாட்டேன் உன்னால தான் நான் எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன். ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து போய்விடு இல்லை என்றால் என்ன நடக்கும் என்று தெரியாது என காவேரி உச்சகட்டத்தின் கோபமாக பசுபதி இடம் மல்லு கட்டுகிறார்.
ஆனாலும் பசுபதி அடங்காமல், காவிரியிடம் உன்னையும் உன் குடும்பத்தையும் சந்தோஷமாக இருக்க விட மாட்டேன். இனி உங்களுக்கு நான் தான் எமன் என்று சொல்லிவிட்டு விஜய் குடும்பத்திற்கு பிரச்சினை கொடுக்க ராஹினியை கூட்டிட்டு போய்விடுகிறார். அங்கே ஏற்கனவே விஜய்யின் பாட்டிக்கும் சித்திக்கும் பசுபதியால் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்ற பயத்தினால் காவேரியை வீட்டுக்குள் சேர்க்க கூடாது என்று பிளான் பண்ணி விட்டார்கள்.
அவர்களிடம் சென்று காவேரி இங்கே வந்தால் நான் பிரச்சனை பண்ண தான் செய்வேன். விஜய்க்கு குடைச்சல் கொடுப்பேன் என்று தகராறு பண்ண ஆரம்பித்து விட்டார். உடனே விஜய், பசுபதியை மிதித்துவிட்டு நீ சொன்னாலும் சரி யார் சொன்னாலும் சரி நான் காவேரோடு தான் சேர்ந்து வாழ்வேன். உன்னால் முடிந்ததை செஞ்சு பாரு என்று பசுபதிக்கு சரியான பதிலடி கொடுத்து கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பி விடுகிறார்.
இதனால் அடிபட்ட பாம்பாக இருக்கும் பசுபதி, காவேரி மற்றும் விஜய் கொடுத்த அவமானத்தால் இவர்கள் இருவரையும் பிரிக்க வேண்டும் என்று சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே காவிரி, விஜய்யுடன் சேர முடியாமல் தான் தவித்துக் கொண்டு வருகிறார்.
இன்னும் பசுபதியின் ஆட்டம் அதிகரிப்பதால் பலியாடாக சிக்கப் போவது விஜய் தான். ஆனால் அதற்கு முன் காவிரி கர்ப்பமான விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தால் விஜய்யின் பாட்டி விஜயுடன் காவிரியை சேர்த்து வைக்க வாய்ப்பு இருக்கிறது.