Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியல் தான் தற்போது ரசிகர்களின் பேவரைட் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விஜய் மற்றும் காவிரியின் கெமிஸ்ட்ரி, ரொமான்ஸ், நடிப்பு எல்லாம் ரசிகர்களை கவர்ந்ததால் VIKA என்ற அந்தஸ்துடன் ரசிகர்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார்கள்.
அதனால் தான் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ற மாதிரி நேரத்தை மாற்றினார்கள். அதாவது ஆரம்பத்தில் 6.30 மணிக்கு மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ப்ரைம் டைமிங் இல் வேண்டுமென்று ரசிகர்கள் கேட்டதால் 6.30 மணியிலிருந்து 7.30மணிக்கு மாற்றி விட்டார்கள்.
அந்த வகையில் மகாநதி சீரியல் நேரத்தை மாற்றியதில் இருந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது. மேலும் தற்போது இந்த சீரியல் ஆரம்பித்து 600 எபிசோடு தாண்டியதால் இதை மகாநதி டீம் கொண்டாடும் வருகிறார்கள்.
அத்துடன் இதற்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கும் ட்ரீட் கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய சேனல் டபுள் ட்ரீட்டுடன் வர போகிறார்கள். அதாவது காலையில் 12 மணிக்கு இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பான எபிசோடு மறுபடியும் ரீ டெலிகாஸ்ட் பண்ணப் போகிறார்கள்.
அந்த வகையில் 7.30 மணிக்கு மகாநதி சீரியல் போடும்பொழுது யாராவது மிஸ் பண்ணிட்டா அதற்கு பீல் பண்ணாமல் இரவு 10:30 மணிக்கு பார்த்துக் கொள்ளலாம். இதையும் விட்டுவிட்டால் மறுநாள் 12 மணிக்கும் டிவியில் பார்த்துக் கொள்வதற்காக சேனல் தரப்பில் இருந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள். அதுவும் 600வது எபிசோடு முன்னிட்டு அதிரடியாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.