வீரா சீரியலில் மாறனாக வரப்போகும் மகாநதி விஜய்.. அபிக்கு கிடைத்த புது சீரியல்

New Serial: விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல் மூலம் அறிமுகமான சுவாமிநாதன் நடிப்பால் சின்னத்திரை தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து விட்டார். அத்துடன் இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து மகாநதி சீரியல் மூலம் விஜய் என்ற கேரக்டரில் எண்டரி ஆனார். ஆனால் இவர் வந்ததும் காவேரி நவீன் காதலை பிரிக்க தான் வந்திருக்கிறார்.

இந்த கேரக்டர் எங்களுக்கு தேவையே இல்லை என்று மக்கள் ஆரம்பத்தில் விஜயை வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால் போகப் போக விஜய் அவருடைய நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களை கவர்ந்து இவர் தான் எங்களுடைய ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அந்த வகையில் வீகா என்ற முத்திரையை பெற்றுக் கொண்டார். இப்படிப்பட்ட ஹீரோவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருக்கிறது. கமரோட்டு 2 என்ற கன்னட படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். அடுத்ததாக தெலுங்கு சீரியலிலும் புதுசாக கமிட் ஆகியிருக்கிறார்.

அதாவது தற்போது தமிழில் வீரா என்ற சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலின் ரீமேக் தெலுங்கில் அதிகாரப்பூர்வமாக எடுக்கப் போகிறார்கள். இதில் விஜய் என்ற சுவாமிநாதன் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் இவருக்கு ஜோடியாக விஜய் டிவியில் நீ நான் காதல் என்ற சீரியலில் அபி என்ற கேரக்டரில் நடித்த வர்ஷினி கமிட் ஆகி இருக்கிறார்.

இந்த சீரியலும் தமிழில் வெற்றி நடை போட்டு வருவதால் தெலுங்கிலும் இவருடைய கேரக்டர் நிலைத்து பேசும் அளவிற்கு நடிப்பும் சீரியலும் ஹிட் கொடுக்கும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.