Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா பிரச்சனை முடிந்து விட்டது. இனி விஜய் காவேரி ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதிலும் சூனியம் வைக்கும் விதமாக இரண்டு கிழவிகளால் விஜய் காவேரி வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது.
அதாவது காவிரி, விஜய்யுடன் இருந்தால் பசுபதி ராகினியால் பிரச்சனை வரும், இதனால் விஜயின் நிம்மதி பறிபோகிவிடும் என்று யோசித்த விஜய்யின் பாட்டி காவிரியை தனியாக சந்தித்து என் பேரன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் நீ அவனுடைய வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்.
அதே மாதிரி விஜய்யின் சித்தியும் காவிரி வீட்டிற்கு சென்று சாரதாவிடம் உங்க குடும்பம் விஜய் வாழ்க்கையில் நுழைந்த பிறகு தான் தேவை இல்லாத சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அம்மா அப்பா இல்லாத ஒரு பையனுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனை தேவையே இல்லை. அதனால் இனி உங்க பொண்ணு எங்க விஜய்க்கு வேண்டாம்.
முறைப்படி விவாகரத்து பண்ண வேண்டும் என்று கரராக பேசிவிட்டு போய்விடுகிறார். இதனால் கடுப்பான சாரதா, காவிரி இனி என்னுடைய மகளாக என் வீட்டிலேயே இருப்பாள். அதே மாதிரி உங்க பேரனும் என் மகளை தேடி என் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட காவேரி ஏற்கனவே பாட்டியும் நம்மிடம் சொல்லிவிட்டார்ள். இப்பொழுது ராதா சித்தியும் வீட்டில் வந்து பேசி இருக்கிறார்கள் என்றால் அவர்களை மீறி நாம் அங்கே போவது சரியாக இருக்காது என்று முடிவு எடுத்து விட்டார்.
இது எதுவும் தெரியாத விஜய், காவிரியை கூட்டிட்டு போவதற்கு சாரதா வீட்டுக்கு வந்து கூப்பிடுகிறார். ஆனால் சாரதா, விஜயுடன் காவிரியை அனுப்ப தயாராக இல்லை, ஆனாலும் பிடிவாதமாக இருந்து காவிரியை கூட்டிட்டு போக வேண்டும் என்று நினைத்த விஜய் இடம் நான் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் எந்த பிரச்சினை பண்ணாமல் இங்கு இருந்து போங்க என்று அனுப்பி வைத்து விடுகிறார்.
என்ன ஆச்சு காவிரிக்கு என்று புலம்பிக்கொண்டே விஜய் கோபத்துடன் வீட்டிற்கு போய்விடுகிறார். காவிரி வரவில்லை என்று தெரிந்ததும் விஜய்யின் பாட்டியும் சித்தியும் சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார்கள். இதனை அடுத்து காவிரி வயிறு பெரிசாக இருக்கிறது என்று பாட்டி சொல்கிறார். அன்னைக்கே இப்படித்தான் இருந்தது, ஆனா அப்பொழுது விட இப்பொழுது ரொம்ப பெருசாக இருக்கிறது என்று கேட்கிறார்.
இதை கேட்டதும் காவிரி கர்ப்பமாக இருக்கிறாரோ என்ற சந்தேகம் சாரதாவிற்கு வந்துவிட்டது. அதனால் காவிரி கர்ப்பமான விஷயத்தை சாரதா தெரிந்துகொண்டு விஜய்யும் காவிரியும் ஒன்று சேர்க்கும் விஷயத்தில் சாரதா அதிரடியாக களமிறங்க போகிறார்.