பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பிக்கு ஆப்பு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் இல்லத்தரசிகளின் நாடகமாக வருகிறது. அதிலும் பாக்கியா கேரக்டர், துவண்டு போய் இருக்கும் பெண்கள் துணிச்சலுடன் போராடி குடும்பங்களை கௌரவமாக பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லும் பொருட்டாக இருக்கிறது.

என்னதான் கணவருடன் சப்போர்ட் இல்லை என்றாலும் புகுந்த வீட்டில் மற்றவர்கள் அனைவரும் இவரை தூக்கிக் கொண்டாடும் விதமாக இருப்பதால், கடைசி வரை அவர்களுக்காக முன்னேறி காட்ட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுகிறார். மேலும் பாக்கியாவிற்கு துணையாக மகன்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த மருமகள்களும் பக்கபலமாக இருப்பது தான் இன்னும் இந்த நாடகத்தின் கூடுதல் சிறப்பாக அமைகிறது.

முக்கியமாக இந்த நாடகத்தின் மருமகள்களாக இருக்கும் ஜெனி மற்றும் அமிர்தா இவர்களுடைய நடிப்பை பார்ப்பதற்கு எதார்த்தமாகவும், இந்த மாதிரி மருமகள்கள் அமைந்தால் குடும்பமே சொர்க்கமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஜெனி அமிர்தா கேரக்டர் இருக்கிறது. அதிலும் செழியன் பாக்யாவிடம் ரொம்பவே ஒட்டாமல் இருந்த நிலைமையில் கூட அத்தை பக்கம் தான் எப்பொழுதுமே நான் நிற்பேன் என்று இருந்தவர் தான் ஜெனி.

அப்படிப்பட்ட இவரை ரசிகர்கள் அனைவரும் பார்த்து பாராட்டப்பட்ட கேரக்டராக தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தற்போது இவர் இந்த நாடகத்தில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் என்னதான் இவருடைய கேரக்டர் வரவேற்கப்பட்டாலும் முன்னணி கதாபாத்திரம் இல்லாததால் இவரை தேடி ஹீரோயினாக வந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக ஜீ தமிழில் தாவ இருக்கிறார்.

அதாவது ஜீ தமிழில் அடுத்த மாதம் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புது சீரியலில் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதற்கு கமிட்டாய் இருக்கிறார். இரண்டு குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும் இவர்களுடைய கேரக்டர் தான் மெயின் ரோல் என்பதால் ஒத்துக்கொண்டார். இதனால் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா என்பது தான் கேள்விக்குறியை எழுப்புகிறது.

ஏனென்றால் அதில் மெயின் ரோல் பண்ணும் பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவு தான். இதனால் கண்டிப்பாக விஜய் டிவியின் டிஆர்பி ரேட் சற்று குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே இதே மாதிரி கோபி விலகப்போறார் என்ற செய்தி வந்து நிலையில் விஜய் டிவி ஏதோ தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் பார்த்து அவரை தக்க வைத்துக் கொண்டார். அதே மாதிரி ஜெனி விஷயத்தில் நடக்கிறதா என்று பார்க்கலாம்.